பக்கம்:நிழல் முகங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 95

வெடி வச்சுக் கொன்னுட்டு. ஒடிப் போறவன்? சொல்வதைக் கேளடா. சோமாறி, மகனே. கன்னி வெடியயைவிடக் கண்ணிவெடி மேலுடா. என்னை. நல்லாப் பாருடா. ஒன்னைவிட நான்தாண்டா உசத்தி தமிழன். மெட்ராஸ்ல பிறந்தவண்டா. பெண்டாட்டிக் கிட்டேகூடத் தமிழ்லயே பேசுறவண்டா. எனக்குத் தமிழ் தெரியாது என்கிற தைரியத்துலயாடா வாய்க்கு வந்தபடி பேசுறே. மகனே. தமிழ்ல வல்லினம் எத்தனடா..? மெல்லினம் எத்தனடா..? கசடதபற என்ன இனண்டா..? நிசமான தமிழன்னா சொல்லுடா..?"

எல்லோரும், சீனிவாசனை விட்டுவிட்டு. அந்த சர்தார்ஜியையே பார்த்தார்கள். இன்ன வயசு என்று சொல்ல முடியாத வயது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருந்தவர், இப்போது புலிபோல சீறி நின்றார். "போய் உடனடியா ரயில்வே போலீஸைக் கூட்டிட்டு வாறேன். அம்மா இல்லாமலே பிறந்த இந்தப் பயலைப் பிடித்து வையுங்கள்" என்று மேலும் கத்திய சர்தார்ஜியை, பலராமன், அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான். அப்படியும், சர்தார்ஜி முண்டியடித்துப் போகப் போனபோது, தமிழ்ச்செல்வி அவரைத் தடுத்தாட் கொண்டாள்.

"ஒழிஞ்சு போறார். விடுங்க ஸார். இதுக்கு இவர் மட்டும் குற்றவாளியில்ல. ஒரு பெண்ணை ஒரு ஆண் தொட்டவுடனே சம்மதிச்சுடுவாள் என்கிற மாதிரி இப்போது தமிழில் வெளிவருகிற மாத நாவல்களும், ஆபாச சினிமாக்களும், வியாபார வாரப் பத்திரிகைகளும் ஒரு கார்ணம். இவரோட கையில இருந்த மாத நாவலைப் பார்த்தவுடனேயே, இவரு மோசமாய் ஏதாவது பண்ணு வார்னு நெனைத்தேன். விட்டுத் தள்ளுங்க. போலீஸ் வந்தால். இவங்களுக்குக் கெட்ட பேர் வாரதோடு. இந்த ஆசாமியும் ஒரு கிரிமினலாய் மாறி விடுவார். காரணம் இந்த நாட்டுப் போலீஸிடம் இந்த சீனிவாசன் மாதிரிதான். தம்பி சீனி. வேற கம்பார்ட் மெண்ட்ல போய் உட்காருப்பா. இது உனக்கு நல்லது. உட்காருங்க. சர்தார்ஜி அண்ணா"

சர்தார்ஜி, தமிழ்ச்செல்விக்குக் கட்டுப்பட்டு, உட்கார்ந்தபோது, சீனிவாசன் மெளனமாக எழுந்தான். காஞ்சனாவை அழுத்தமாகப் பார்த்தான். இப்போதாவது காதலிப்பாளா என்பது மாதிரி; இப்படி பல சினிமாக்களில், கதாநாயகர்களை நாலு பேருக்கு முன்னால். அவமானப்படுத்தி, அதற்குப் பிறகு அவர்கள் மீது அனுதாபப்பட்டு அப்புறம் காதல் வயப்பட்ட கதாநாயகிப் பெண்களையும், அவர்களின் நிழலாகிய சினிமாக்களையும் நினைத்தபடியே நடக்கப் போனான். காஞ்சனா, எப்படியும், அவனைக் காதலிப்பாள் என்பதில், அவனுக்கு இப்போதுதான் நம்பிக்கை அதிகமாகியது போல் அவளையே திரும்பத் திரும்பப் பார்த்து நடந்தான்.