பக்கம்:நிழல் முகங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சு. சமுத்திரம்

அப்போது ரயில் பயல். எழுந்தான். சீனிவாசன் கையைப் பிடித்து இழுத்தான். பிறகு தனது வேட்டி, மடிப்பிற்குள் இருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து எக்கி எக்கிக் குதித்து, சீனிவாசன் பைக்குள் போட்டான். உடனே நவாப் ஜான், “எங்க பயல் அயோ க் கி யப் பயல் க, கொடுக் கிற காசைத் திருப்பி க் கொடுத்துடுவான்" என்று கமெண்ட்டு அடித்தான். சீனிவாசன், ஒசைப்படாமலே போய்விட்டான். பலராமன், தன் பங்குக்கும் ஏதோ சொல்லப்போனான். அவனை தமிழ்ச்செல்வி தலையாட்டித் தடுத்தாள்.

"தயவு செய்து, விஷயத்தை இதோடு விட்டுடலாம்; ஏன்னா, ஒரு பெண் ைண யே கலாட் டா செய்தாலும் , அந்த ப் பெண்ணாலேயே கலாட்டா வாரதாய் நினைக்கிற உலகம். இது. அதனாலதான். இந்திரன் கெட்டதும் பெண்ணால. சந்திரன் கெட்டதும் பெண்ணாலன்னு கெடுக்கப்பட்ட பெண்களைக், கெட்டுப் போனவர்களாய் இப்பவும் பேசுறோம்."

எல்லோரும்; இப்போது சர்தார்ஜியை விட்டுவிட்டு, தமிழ்ச்செல்வியையே பார்த்தார்கள். நவாப்ஜானும், பலராமனும், அவளை பயபக்தியோடு பார்த்தார்கள். ரயில் பயல். "அம். அம்." என்று சொல்லிக் கொண்டு, பலராமன் இடுப்பை குத்துக் குத்தி சொல்லிக் காட்டினான். தமிழ்ச்செல்வி, அவனை தம் உடம்போடு சேர்த்து ஒட்ட வைத்துக்கொண்டாள். அவன் ஐந்து ரூபாயைத் தியாகம் செய்ததால் நெகிழ்ந்து போன காஞ்சனா, அந்த அழுக்குப் பயலை, தமிழ்ச்செல்வியிடமிருந்து பிடித்திழுத்து தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டாள். பிறகு தனது பைக்குள் இருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து, அவன் இடுப்பில் சொருகினாள். அவன் வாங்க மறுத்தபோது, காஞ்சனா முகம் சுழித்தாள். உடனே அவன் அவளை மகிழ வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, அந்த ரூபாயை மடியில் சுருட்டி வைத்துக் கொண்டான். காஞ்சனா, அவன் தலையைக் கோதி விட்டாள். சிறிது நேரம்வரை, அருவெருப்பாகத் தெரிந்த பையன், இப்போது அவளுக்கு அமிர்தம் போல் தென்பட்டான். காஞ்சனாவையும் ரயில் பயலையும் ஒரு சேர பார்த்தபடி, பலராமன் கேள்வி இல்லாமலே பதிலளித்தான்.

"பயலுக்கு வாய்தான் ஊமை. ஆனால் காது பாம்புக் காது.”

"ஆமா. செவிடாய் இருக்கவங்களால பேசமுடியாது. இவனுக்கு எப்படிக் காது கேட்குது சர்தார்.ஜி.”

"சின்ன வயசுலே. ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். அதாவது இவன் பிறவி ஊமையாய் இருக்கமாட்டான். ஏதோ ஒரு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். டேய் பையா. என்ன அதிர்ச்சி