பக்கம்:நிழல் முகங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 97

ஏற்பட்டது. வாயால சொல்ல முடியாட்டியும், சைகையால சொல்லிக் காட்டுடா..."

இதுவரை சிரித்துக் கொண்டிருந்த அந்தப் பயல். அப்போது தான் அதிர்ச்சியடைந்தவன் போல, வாயை மூடினான். கண்களை, கைகளால் மூடிக் கொண்டான். தமிழ்ச்செல்வி, இருக்கையில் இருந்து எழும்பி, அவனைத் தன்னருகே கொண்டு வந்தாள். சர்தார்ஜி, ஒரு கேள்வி கேட்டார்.

'டிக்கெட் இல்லாமல் வாரானே. ரயிலுல பிடிக்க மாட்டாங்களா..”

"பிச்சுப்புட மாட்டோம். பிச்சு. இவனுக்கு டிக்கெட் பரிசோதகர். ரயில் கார்டு, ரயில்வே போலீஸ் எல்லாருமே அத்துப்படி. எங்களுக்குத் தெரிஞ்சவங்களை விட, இவனுக்குத் தெரிஞ்சவங்களே அதிகம். எல்லாரும். இவன்கிட்ட இதுவரைக்கும் அன்பாய்த்தான் நடத்துக்கிறாங்க அடடே என்னம்மா இது ரயிலு சொல்லாமல் கொள்ளாமல் ஓடுது. பாரு..."

ரயில் வேகமாய் நகர்ந்தபோது, காஞ்சனா பாதி பசியோடும், மீதி ருசியோடும் செல்லமாகப் பேசினாள்.

'அய்யோ. சாப்பாட போயிட்டு. சாப்பாடு போயிட்டு. ராத்திரியும் சாப்பிடல. காலையிலயும் சாப்பிடல. இப்பவும் சாப்பிடல."

"இன்னிக்கு ஜென்மாஷ்டமி. அதனால பகவானாப் பார்த்து நம்மைச் சாப்பிடாமல் வச்சுட்டார்."

"எந்த பகவான். சீனிவாசப் பகவான்தானே.”

தமிழ்ச்செல்வி, கடைசியாகச் சொன்னதைக் கேட்டு, எல்லோரும் சிரித்தார்கள். ரயில் பயல், சற்று லேட்டாகச் சிரித்து, கை தட்டினான். இதற்குள், அந்த ரயில் படுவேகமாக ஓடியது. கொளுத்தும் வெயிலில் கொதிக்கக் கொதிக்க ஓடியது. பார்த்த இடமெல்லாம், வடநாட்டுப் பச்சையல்ல. தென்னாட்டுப் பாறைகள். மரங்கள் செடிகள் இல்லாமல் மொட்டையா நிற்கும் குன்றுகள். ஜாக்கெட்டைத் துக்கிப் பிடித்து வாயால் ஊதி, கொதிக்கும் சூட்டைக் குளிர வைக்கப்போன காஞ்சனாவை, கல்யாணி, சட்டென்று, தலையிலடித்து, தடுத்தாள்.

பூகம்பப் பூமியில், போய்க் கொண்டிருந்த ரயிலுக்குள், மூன்று மணியளவில் லேசாய் காற்று வீசியது. வெளியே. சில இடங்களில் பச்சைத் தோற்றங்கள். டில்லிப் பெண்கள் வயிற்றைக் கையில் பிடிந்திருந்தார்கள். ரயில் பயல், பெஞ்சுக்குக் கீழே அடக்கமாகத்