பக்கம்:நிழல் முகங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சு. சமுத்திரம்

தூங்கிக் கொண்டிருந்தான். தக்காரும் மிக்காருமின்றி வேகவேகமாக ஒடிய ரயில், நான்கு மணியளவில் எக்கி எக்கிப் போனது. மேட்டுப் பகுதி. மலைப்பகுதி.

ரயில் ரேணிகுண்டாவுக்குள் நுழைந்தது. சற்று தொலைவில். அடுக்கடுக்கான ஏழு குன்றுகளுக்கு மேல். இருந்த திருப்பதி கோவிலைப் பார்த்ததும், டில்லிப் பெண்கள் எழுந்து நின்று கும்பிட்டார்கள். அந்த சர்தார்ஜியும் எழுந்து நின்று கும்பிட்டார். முன்னாலும், பின்னாலும் இருந்த பெட்டிகளில் பகவாண்டு பகவாண்டு தேவ்டு தேவ்டு என்று பக்திப் பரவசத்தில் கத்தினார்கள். சிலர் திருப்பதிக்குப் போவதாகக் கூறிய வாக்களிப்பை சுமைவிட்டது என்பது மாதிரி இந்த ரயிலில் இருந்தே நிறை வேற்றுவது போல் தோன்றியது.

"என்ன விசேஷம்?' என்றாள் தமிழ்ச்செல்வி. கல்யாணி விளக்கினாள்.

"திருப்பதி கோயில் அதோ தெரியுது பாருங்க. பகவான் தன்னோட கல்யாணத்துக்கு குபேரன்கிட்ட கடன்பட்டு. அந்தக் கடனை அடைக்க முடியாமல். இந்த மலையில் வெறுப்போட வந்து நின்னுட்டார். கட்டுன பெண்டாட்டி கிட்டவும், சண்டை போட்டுட்டார். அலர்மேல் மங்கை அம்மாவோட கோவில் திருப்பதியில் இருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி இருக்குது. இதனால் தான் வெங்கடேச பகவானுக்கு குடும்பச் சிக்கலும், பணச் சிலவும் புரியுது. அதனாலதான் இந்தச் சிக்கல்களில் மாட்டிக்கிறவங் களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கார்."

கல்யாணி பேசுவதை பொறுமையோடு கேட்ட தமிழ்ச்செல்வி, "புராணங்கள் அசிங்கப்படுத்துவது மாதிரி பகவானை வேறு எதுவும் அசிங்கமாக்கவில்லை" என்று சொன்னாள். மிகப்பெரிய உபன்யாசம் செய்துவிட்ட திருப்தியில் இருந்த கல்யாணியின் முகம், அந்தப் பெயருக்கு எதிராகப் போனது. கோபம் வந்தது. அந்தச் சமயம் பார்த்து, ரயில் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நின்றது. உடனே அவளுக்குப் பசி வந்துவிட்டது.

நவாப் ஜானும், பலராமனும் எழுந்தார்கள். அந்தப் பெண்களிடம் இப்போது பணம் வாங்கிக் கொண்டே கீழே இறங்கினார்கள். ரயில் பயல், எழும்பி உட்கார்ந்து முகத்தைத் துடைத்தான். தமிழ்ச் செல்வியும், எழுந்தாள். அவள் கையைப் பிடித்த பயலைப் பார்த்து, கொஞ்சம் கீழே இறங்கிக் காலாற நடந்துட்டு வாறேன்" என்று அவனிடமிருந்து விடுபட்டுக் கீழே இறங்கினாள்.