பக்கம்:நிழல் முகங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 99

கால்மணி நேரம் கடந்தது.

பலராமனும், நவாப்ஜானும், பொட்டலங்களோடு உள்ளே வந்தார்கள். திடீரென்று அங்குமிங்குமாய் தடுமாறினார்கள். ரயில் புறப்பட்டு விட்டது. லேசாய் சறுக்கி விழுவது போல் ஒரு ஆட்டு ஆட்டி பபடியே ரயில் வேகவேகமாய் நகர்ந்தது. ரயில் பயல், வெளியே வந்து, அங்குமிங்குமாய் பார்த்துவிட்டு, "அம். அம்." என்றான். அப்போதுதான் தமிழ்ச்செல்வி அங்கே இல்லாததைக் கண்டார்கள். அந்தப் பயல் இப்போது "அம். அம்..” என்று சொல்லியபடியே கைகளை வெளியே நீட்டிக் காட்டினான். வெளியே விழப் போகிறவன்போல வயிற்றை ஜன்னலில் வைத்து அழுத்தினான். பலராமன், அவன் பார்த்த பக்கமாய்ப் பார்த்தான்.

வெளியே பிளாட்பாரத்தில், தமிழ்ச்செல்வியை நான்கைந்து பேர் இழுத்துக் கொண்டு போனார்கள். இந்த ரயிலோ, அவளையும், அவளைப் பிடித்த எதிரிகளையும் கடந்து எதிர்த்திசையில் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்ச்செல்வி தட்டுத் தடுமாறி தலையை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டிருக்கிறாள்.

@

அந்த ரயில், எந்தப்பக்கம் விழலாம் என்பதுபோல், அங்குமிங்குமாக ஆடி, உருள்வது தெரியாமல் உருண்டு கொண்டிருந்த சக்கரங்கள், இப்போது வேக வேகமாய் நிறுத்தப் பட்டதால், சில சக்கரங்கள் தண்டவாளத்தில் உரசிய அழுத்தத்தில் தீப்பொறிகள்கூட பறந்தன.

ரயில் பெட்டியில் தாறுமாறாக வைக்கப்பட்டிருந்த கூஜா, தட்டுமுட்டுச் சாமான்கள் கீழே விழுந்து ஒலம் போட்டன. ஆங்காங்கே மனிதக் குரல்கள் சேர்ந்து கொண்டன.

அந்த ரயில், ரயில் நிலைய பிளாட்பாரத்தைத் தாண்டி நின்று விட்டாலும், நவாப்ஜான் அகாரணமாய் உபயோகப்படுத்தக்கூடாத அந்த அபாயச் சங்கிலியை இன்னும் பிடித்தபடியே நின்றான். அது போதாது என்பதுபோல் அவன் கையை பலராமன் பிடித்துக் கீழ் நோக்கி இழுத்தான். ரயில் நின்ற அமர்க்களத்தை உணர்ந்து இருவரும் பிரேக் சங்கிலியை விட்டு விட்டு ஓடினார்கள். டில்லிப் பெண்கள் வாசலோரத்திற்கு வந்து, கீழே இறங்கலாமா வேண்டாமா என்று ஆழம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.