பக்கம்:நிழல் முகங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 101

நவாப் ஜானும், பல ரா மனு ம் , தங்க ளின் கைவசம் இருந்தவர்களின் தலைகளை ஒன்றோடு ஒன்று மோத விட்டார்கள். இருவரின் இடுப்பிலும், பின்கால்களிலும் முட்டிக் கால்களால் உதைத்தபடியே, இருவரையும் ஒருவர் பக்கம் ஒருவராகத் தள்ளி, தலைகளை மோத விட்டார்கள். அப்புறம் பலராமன், அந்த இருவருக்கும் பின்புறமாகச் சென்று அவர்கள் கைகளை வளைத்துப் பிடித்துக் கொண்டான். நவாப்ஜான், இரண்டுபேர் தலையையும் செங்குத்தாகப் பிடித்தான். சர்தார்ஜி கையில் அகப்பட்ட ஒருத்தன், கழுத்து வலி தாங்காமல் தவித்தான். அவன் நாக்கு வெளியே தொங்கியது. தாடிக்காரரின் வலது கைப்பிடிக்குள் அவன் பிடறியும் கழுத்துக்குழலும் பிதுங்கிக் கொண்டு இருந்தன. மெக்கானிக் நாராணயன், இன்னொருத்தனை கஷ்டப்பட்டு இழுத்தான். அவனோ, சண்டிமாடு மாதிரி, கால்கள் நகர்த்தாமல் இருந்தான். அந்தக் கால்கள் தரையில் கோடு போட்டபடியே நகர்த்தப்பட்டன. உடனே, இரண்டுபேர் அவனைப் பின்புறம் இழுத்துத் தள்ளியதால், நாராயணனுக்கு இப்போது அவனை இழுப்பது எளிதாக இருந்தது.

எப்படியோ, அந்தக் கும்பல் ஒரு பக்கமாக நிறுத்தப்பட்டது. இவர்கள் தப்பிக்காமல் இருப்பதற்காக, நவாப்ஜான் வகையறாக்கள் கைகோர்த்து வட்டமாக நின்றார்கள். இந்த வட்டத்தைச் சுற்றி, கைகளைக் கோர்க்காமலே, இன்னொரு மனித வட்டம், வேடிக்கை வட்டம். இவற்றிற்கு மையமாகவும், காரணமாகவும், தமிழ்ச்செல்விமுடிகலைந்து, விழி பிதுங்கி, பித்துப் பிடித்தவள்போல் நின்று கொண்டிருந்தாள். இதற்குள் அந்த நால்வரில் ஒருத்தன் வீறாப்பாகப் பேசினான்.

"வீட்ல இருந்த நகைகளையும், ஆயிரக்கணக்கான ரூபாயையும் இவள் திருடிட்டு வந்துட்டாள். அத்தை மகள் என்கிறதுக்காக வீட்ல அடைக்கலம் கொடுத்தால், ராத்திரியோட ராத்திரியா கையில அகப்பட்டதைச் சுருட்டிக்கிட்டு ஓடிட்டாள். நான் கஷ்டப் பட்டு கண்டு பிடிச்சேன். நகைகளைக் கொடுத்துடச் சொல்லுங்க. விட்டுடுறேன்."

வேடிக்கை வட்டம், அவன் சொல்வதில் நியாயம் இருக்கலாம் என்பதுபோல், அவளை ஆமோதிப்பாய், கண்களை ஏற்றி இறக்கிப் பார்த்துவிட்டு, தமிழ்ச் செல்வியை, எதிரி வக்கீல் பார்ப்பதுபோல் பார்த்தது. தமிழ்ச்செல்வி, சொன்னவனையும் பார்க்காமல், சுற்றி நின்றவர்களையும் பார்க்காமல், உதடுகளைக் கடித்து விட்டுக் காறித் துப்புவது போல் சொன்னாள்.

"பலராமண்ணா. நவாப்பண்ணா. இவன்தான் தாமரைப் பாண்டி.."

இ.ஒ.