பக்கம்:நிழல் முகங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சு. சமுத்திரம்

பலராமனும், நவாப்ஜானும், ஆளுக்கொரு பக்கமாக நின்று, அவனை முறைத்துப் பார்த்தார்கள். வாட்ட சாட்டமான உடம்புக்காரன்தான். தலைமுடியை வேண்டுமென்றே தூக்கிவிடப் பட்டதுபோல் தோன்றியது. வித்தியாசமான கண்கள். லேசாகத் துருத்தியும், ஆகாயத்தில் பறக்கும் கழுகு கீழே கோழிக் குஞ்சு களையோ, அல்லது இதர இரைகளையோ கண்டு பிடிப்பதற்காக இறக்கைகளை ஆடாமல் வைத்தபடியே பறக்குமே, அப்படிப்பட்ட பறக்கும் கண்கள். விழிகளை ஒதுக்கி, கண்களை மட்டும் தனியே காட்டும் தோரணை. இந்தத் தோரணையில் தந்திரமும், கயவாளித்தனமும் தெரியப்படுத்தப்பட்டன. பலராமன், தாமரைப் பாண்டியின் குரல் வளையோடு அவன் சட்டைக் காலரைப் பிடித்து, இறுக்கியபோது, நவாப்ஜான் இளக்காரமாகக் கேட்டான்.

"இந்தப் பொண்ணு ஒன் வீட்ல திருடி வச்ச நகையும் பணமும் ரயிலுக்குள்ளே இருக்குது. நீ எப்போ வருவே. ஒனக்குக் கொடுக்கலாமுன்னுதான் காத்திருந்தோம். வாடா கண்ணு."

இதற்குள், சர்தார்ஜியின் கைக்குள் கழுத்தை அடகு வைத்தவன், கத்தினான், ஒல்லியானவன். கொக்குத் தலையன். நாற்பது வயதுக்காரன்.

"நான் ஒரு பாவமும் அறியாதவன்யா. பண்ணையார் மகன் சொன்னாரேன்னு தெரியாத்தனமா வந்துட்டோம்யா.”

"பண்ணையார் மகன் எதெல்லாமோ கேட்பான். அதெல்லாம்

கொடுப்பியா..?”

"நான் யோக்கியன் சார். இந்த படிச்ச மனுசனால கெட்டுப்போய், இப்போதான் சாமி அயோக்கியனா போயிட்டேன். என்னை விட்டுடுங்க சாமி."

“எப்டிய்யா விடுறது...? தமிழ்ச்செல்வி திருடுன நகையில கொஞ்சத்தை ஒனக்கும் தாறோம். கொஞ்சம் பொறுத்துக்கோ."

"தமிழ்ச்செல்வியை திருடின்னு சொன்னா, வாய் அழுகிடும் சாமி. இந்தம்மா சொத்தைத்தான் அந்தச் சண்டாளனும் அவன் அப்பனும் திருடியிருக்காங்க."

'அவன் அயோக்கியன்னு தெரிஞ்சுக்கிட்டே அவனுக்கு ஒத்தாசை செய்திருக்கே... இதுக்கே ஒனக்கு ஒன்பது வருஷம் தீட்டனும்."

"அய்யோ சாமி. அப்டிச் சொல்லாதீங்க சாமி, ஒங்க வாயில நல்ல வார்த்தை மட்டும்தான் வரணும் சாமி. ஏதோ கூப்பிட்டாரேன்னு வந்துட்டேன் சாமி. ஒரு வேலைக்காரன் ஒரு