பக்கம்:நிழல் முகங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 103

பண்ணை வீட்ல சேர்ந்தபிறகு, அந்த குடும்பத்தோட நல்லதுக்கும் கெட்டதுக்கும் கூடயே நிக்கணுமுன்னு எங்கய்யா சொல்லிட்டு செத்தாரு சாமி. அதனாலதான் இவனோட கெட்டதுக்கும் கூட நின்னேன் சாமி."

"ஏண்டா. சாமர்த்தியமாய் பேசுறதாய் நெனப்பா. எலும்பு கழண்டுடும்."

"இப்போவே கழண்டு போய்தான் நிக்குது சாமி. நான் ரெண்டு மூணு வாரமாய்த்தான் அயோக்கியனாயிட்டேன் அய்யா. அதுக்கு முன்னால யோக்கியமய்யா. வேணுமுன்னால் தமிழ்ச்செல்வி அம்மாகிட்டே கேட்டுப் பாருங்கய்யா. ஏம்மா. ஒங்களத்தான். என்னைப்பத்தி சொல்லுங்கம்மா."

"ஏண்டா அந்தம்மாவை கசாப்பு ஆட்டைப் பிடிச்சு இழுக்கது மாதிரி இழுத்துட்டு, அதையே இப்போ வேற கூப்புடுறியா..? பாருங்க சர்தார்ஜி இந்தப் பயலை. இறுக்கிப் பிடிங்க."

"பார்த்துட்டுத்தான் இருக்கேம்மா. இவன் சொல்றதுல கொஞ்சம் நிசமும் இருக்குது. பெரும்பாலான ஏழைகள் என்ன செய்யுறேமுன்னு தெரியாமலே, செயல்படுறாங்க. இவனுக்கு இந்தம்மாவை கடத்துறதுக்கு இவன் ஒத்தாசை செய்தான். ஆனால் அது எதுல கொண்டு போய் விடும் என்கிற உணர்வே இவனுக்குக் கிடையாது. இந்த நாட்டு பிரபுத்துவமும், முதலாளி வர்க்கமும், பாட்டாளி வர்க்கத்துல விவசாயத் தொழிலாளர் வர்க்கத்தை காயடிச்சு வச்சுட்டு. இந்த அப்பாவி மக்கள் இதயங்களை மட்டும் தங்க கிட்டே வைத்துக் கொண்டு அவற்றை துடிக்க வைக்கிற பொறுப்பை பண்ணையார்கள்கிட்டே விட்டுட்டாங்க. இவங்க உடம்பால மட்டுமில்லாமல், உள்ளத்தாலும் சிறைப்பிடிக்கப் பட்டவங்க. இதுல ஒருத்தன்தான் இவன். இவனுக்காகப் பரிதாப் படுறேன்."

சர்தார்ஜி தனது கைக்குள் சங்கமித்தவன் பிடரியை விட்டார். அவனைப் பிடித்து, நவாப்ஜான் பக்கமாகத் தள்ளினார். இதற்குள், நாராயணனால் பிடிபட்டவன் பேசப்போனான். அவன் கன்னத்தில் ஒரு வெட்டுக்காயம், சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வைத்தால் எந்த நிறமோ அந்த நிறம் உருண்டு திரண்ட உடம்பு. மூன்று பத்து வருடங்களை விழுங்கியவன் பிறப்பில் இருந்தே, இப்போது அவனும் தன் பங்குக்குப் பிச்சை கேட்டான்.

"எனக்கு மெட்ராஸ்ப்பா. எதுவும் தெரியாதுப்பா. அப்போவே ஒடி ஒளிஞ்சுட்டானே படா கில்லாடி. அவன்தான் வந்து "வாத்தியாரே. வாத்தியாரே. மலேயாக்காரப் பொண்ணு ஒருத்தி