பக்கம்:நிழல் முகங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சு. சமுத்திரம்

மாமன் வீட்டு நகைகளை திருடிட்டு. இந்த மெட்ராஸ்ல ஒளிஞ்சிருக்காள். நீ காட்டி அதை பிடிச்சே ஒணிக்கு சாராயத்துக்கு சாராயம். நகையிலயும் ஒரு பெர்ஷண்டு ன்னு சொன்னான் சோமாறி, நம்பி ஏமாத்துட்டேம்பா. அடேய் ஒட்டகச் சிவிங்கி! இந்தப் பொண்ணு நல்லப் பொண்ணுன்னு இப்போ சொல்றதை அப்போ ஏ ண் டா சொல்ல ல. க ஸ்மா லம்... எ ன் ைன விட்டுடுங்கப்பா."

"மெட்ராஸ் வாத்தியார் பேசுறதைப் பாருங்க. சர்தார்ஜியாரே இதுக்கும் ஒரு விளக்கம் வச்சிருக்கீங்களா..?”

"இருக்குது. இவர்களுக்குப் பெயர்தான் லும்பன் என்கிறது. கண்டதே காட்சி. கொண்டதே கோலமுன்னு திரியுற வங்க. எப்படியாவது வாழனும் என்று நினைக்கிறவங்க, சமூகத்திலே கடைநிலையில விடப்பட்டவங்க... இவங்க. பிறக்கும்போதே பிளாட்பாரத்துல பிறந்து, சமூக விரோதிகளால் பேணப் படுறவங்க, இவங்களுக்கு தர்மமும் ஒண்ணுதான். அதர்மமும் ஒண்ணுதான். அடி வாங்கிக்கிறதும் ஒண்ணுதான். அடிக்கிறதும் ஒண்ணுதான். இவங்களைப் பாட்டாளி வர்க்கத்தோடு சம்பந்தப் படுத்திப் பேசுறது தப்பு. இவர்கள் அர்த்தமுள்ள மனிதர்கள் இல்ல. வாழ்க்கையின் அசுத்தத்தில் இருப்பவர்கள்."

இதற்குள், ஒரு ரயில் பெட்டியில் இருந்து, துப்பாக்கிகள் கொண்ட போலீஸார் இறங்கலாமா வேண்டாமா என்று யோசித்த போது, ரயில் ப்யல், இப்போதும் நரி மாதிரி ஊளையிட்டான். ஒருத்தனின் பெருவிரலை, எக்கி நின்று பிடித்தான். தமிழ்ச்செல்வி நின்ற கூட்டத்தைச் சுட்டிக் காட்டினான்.

ரயில்வே போலீஸாரும், ரயில்வே காப்பாளரும், டிக்கெட் பரிசோதகர்களும் எதிரெதிர் திசையில் ஓடி வந்தார்கள். வெள்ளை சீருடை அணிந்த ரயில்வே கார்ட், பச்சைக் கொடியை ஆட்டிய படியே ஒடி வந்தால், அவர் தனக்குத்தானே, " சிக்னல்" காட்டி ஓடி வருவதைப் பார்க்க வேடிக்கையாய் இருந்தது.

இப்படியாக எல்லா அதிகாரிகளும் அந்தக் கூட்டத்திடம் ஆற அமர வந்தார்கள். அவர்களைப் பார்த்து, நவாப்ஜான், அடக்கமாக ஒதுங்கிக் கொண்டு நாராயணனைப் பேசச் சொன்னான். நாராயணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நவாப்ஜான், ஏற்கனவே பரிச்சயமான ரயில்வே போலீஸாரிடம் விவகாரத்தை விளக்கிக் கொண்டு இருந்தான். திடீரென்று தாமரைப்பாண்டி, அந்த போலீஸ் படையைப் பார்த்து, அரைகுறை ஆங்கிலத்தில் கத்தினான்.