பக்கம்:நிழல் முகங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 105

"ஐ ஜென்டில்மேன். வி தீப். எங்க வீட்டு இருபது பவுன் நகையை திருடிட்டி வந்துட்டாள். பதினையாயிரம் ரூபாயை ஸ்டீல் பண்ணிட்டாள்."

ரயில்வே போலீஸார், தாமரைப்பாண்டியைப் பார்த்தார்கள். பிறகு தமிழ்ச்செல்வியை உற்றுப் பார்த்தார்கள். பிறகு தங்களுக்குள்ளேயே கிசுகிசுத்தார்கள். இதற்கும் பிறகு தனியாய் போய் நின்று கொண்டார்கள். அவர்களின் அதிகாரியான ஒருத்தர் ஆள் காட்டி விரலை ஆட்டியபடியே கத்தினார்.

"இந்தாம்மா. இங்கே வா."

وقایع

அந்த ரயில், தண்டவாளத்தில் இன்னும் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தது.

ரயில் பெட்டிகளுக்குள்ளும் அட்டைகளான பயணிகளில் பலர், மெள்ள மெள்ள வெளியே வந்தார்கள். அந்த சர்தார்ஜி, வெறுங்கையுடன் சர்வசாதாரணமாக நின்றதில் அவர்களுக்குத் திருப்தி. "எவ்வளவு நேரமய்யா ரயில நிறுத்து வைக்கிறது" என்று ஆங்காங்கே முகம் தெரியா பின்னணி கோபக் குரல்கள். அந்தக் குரலுக்குரிய சிலர், அந்தக் கூட்டத்தில் முன்னணியில் போய் கத்துவதற்காக, கீழே இறங்கி வந்தார்கள் கூட்டத்துக்ளுள் போய்ச் சேர்ந்ததும், சராசரி இந்தியராகி, வாய்ச்சொல் வீரம்கூட அற்றுப் போய், அனாதைகளாய் அங்குமிங்குமாய் ஊடாடினார்கள்.

ரயில்வே போலீஸாரின் அலட்டலைப் பற்றி அலட்டிக்காமல், தமிழ் ச் செல்வி ஆகாயத்தையும், பூமி யையும் சாட்சி க்கு அழைப்பவள்போல் மாறிமாறி வெறித்துப் பார்த்தாள். போலீஸ் அதிகாரி, இதற்குள் இன்னொரு தடவை கூச்சல் போட்டார். அந்தக் குரலோனை ஏறிட்டுப் பார்க்காமலே, அந்தக் குரல் வந்த திசை நோக்கி நகரப்போன தமிழ்ச்செல்வியின் கைகளை, பலராமன் பிடித்திழுத்துக் கொண்டே கத்தினான்.

"இவங்களை அங்கே எதுக்கு ஸார் கூப்புடுறீங்க?" "அவங்ககிட்டே விசாரணை நடத்தணும்."

"என்ன விசாரணை.? எ துக்கு விசாரணை.?"