பக்கம்:நிழல் முகங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சு. சமுத்திரம்

"அவள் நகைகளைத் திருடிட்டதாய் இவர் சொல்றாரே."

"என்ன அநியாயம் ஸார். இது? அப்பாவிப் பொண்ணு. முரடர்களோட பலாத்காரத்துல மிரண்டு போய் நிற்காங்க. கடத்தப்பட்டவளை அவள்னு சொல்lங்க.. கடத்துணவனை அவர்னு சொல்றீங்க. என்ன நியாயம் இது.”

"ஒன் கிட்டே எனக்குப் பேச்சில்லை. இந்தாம்மா. இங்கே வா."

'வே ணு மு ன்னால் நீங்க இங்கே வாங்க ... அவங்க வரமாட்டாங்கோ."

"யோவ் திருட்டுக்கு உடந்தைன்னு ஒன்னையும் சார்ஜ் செய்யுவேன்."

"ஒரு பெண்ணைக் கடத்துவதுக்கு உடந்தைன்னு ஒன்மேலயும் புகார் கொடுக்கத் தெரியும்."

பலராமனுக்கும், ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கும் வாய்த் தகராறு முற்றிக்கொண்டே போனது. இருவருக்கும் இடையே இடைவெளி குறைந்து, ஒருவரை ஒருவர் நெருங்கிக்கொண்டு இருந்தார்கள். இந்தச் சயமத்தில், ரயில் பயல், நவாப்ஜானையும் சர்தார்ஜியையும் ஒரு பக்கமாகக் கூட்டிப் போனான். அந்த ரயில்வே அதிகாரியையும் தாமரைப்பாண்டியனையும் கையை நீட்டி மடக்கிச் சுட்டிக் காட்டியபடியே, வலது கண்ணை இழுத்து மூடினான். அதைப் பார்க்காமல், நவாப்ஜான், "என்னடா... என்னடா..." என்றான். பயலுக்குக் லேசாக கோபம்கூட வந்தது. நவாப்ஜான் கையைப்பிடித்து, தனது வலது கை விழியில் வைத்தான். பிறகு, அந்தக் கையை விலக்கிவிட்டு, கண்களைச் சுருக்கிச் சுருக்கி மூடினான். அந்த வேகத்தில் தாமரைப்பாண்டியனையும், பலராமனிடம் தாவா கொடுத்த போலீஸ் அதிகாரியையும் சுட்டிக் காட்டினான். நவாப்ஜானுக்குக் கோபம். தோழனுக்குத் தோள் கொடுக்க முடியாமல், இந்தப் பயல், இழுத்துப் பிடித்து வைக்கிறானே என்று கோபத்தோடு நவாப்ஜான் கேட்கவும், சர்தார்ஜி விளக்கமளித்தார்.

"என்னடா கண்ணடிக்கே...? ஒன்னோட பேஜாராப் போச்சு."

'எனக்கு ஒன்று தோணுது. தாமரைப்பாண்டி, ரயில் இன்ஸ்பெக்டரைப் பார்த்துப் பேசும்போது கண்ணடிச்சபடியே. பேசியிருக்கான். அதாவது அவருக்கு லஞ்சம் கொடுக்கிறதாய் குறிப்பாய் சொல்லியிருக்கான்."

"அப்படியா கழுதே...?”