பக்கம்:நிழல் முகங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசும் உறவுகள்

உங்களின் சிறந்த தொடர்கதை, உண்மையிலேயே எங்களைக் கவர்ந்து விட்டது. ஒவ்வொரு முறையும் படிப்பதற்கு சலிப்புத் தட்டாமல் இருக்கிறது. இந்தக் கதை, என்னமோ... உண்மைக்கதை போல இருக்கிறது. எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புச் சகோதரிகள், மூ. பழனியம்மாள் - வட்கமி, ஜோகூர், மலேசியா.

来来※米※来米米※米

என் தகப்பனார் இந்தியாவில் இருந்துவிட்டு, இங்கு வந்து கடுமையாக உழைத்து, அடிக்கடி பணம் ஊருக்கு அனுப்பினார். பிறகு, இங்கு இறந்து போனார். பல வருடம் சென்று, நான் இந்தியாவுக்கு சுற்றுலா போனேன். அப்போது ஊருக்குப் போய், அப்பாவின் சொத்தைப் பார்க்கலாம் என்று சென்றேன். ஆனால், சென்ற வேகத்திலேயே திரும்பிவிட்டேன். அப்படி எனக்கு ஒரு வரவேற்பு கிடைத்தது. என்னுடைய நண்பர் ஒருவருக்கும் இதேகதிதான்.

ஏ. மாலப்பன்,

நெ. 1", கபாங் ஜெயா, சலாகார், மலேசியா.

米宋米※宋米米米米米

தாங்கள், எங்களின் மலேசிய நாட்டை ஒர் அளவு புரிந்து வைத்திருப்பதாக, உங்கள் தொடர்கதை மூலம் தெரிகிறது. இந்த முயற்சியை கைவிடாமல் தொடருங்கள். அறுவடை கடைசியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/12&oldid=588151" இலிருந்து மீள்விக்கப்பட்டது