பக்கம்:நிழல் முகங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 107

அப்படியேதான் என்பதுபோல், அந்தப் பயல், அசல் கழுதை மாதிரியே குதித்தான். ஆமாம் ஆமாம் என்பது போல், தலையையும் மேலும் கீழுமாகவும் குதிக்க வைத்தான். இந்தச் சமயத்தில் பலராமனுக்கும், ரயில்வே போலீஸ் அதிகாரிக்கும், விவாதம், வாதமாகியது. சில போலீஸ்காரர்கள், அவளை அடித்து நொறுக்கக் கூட ஆயத்தம் செய்வதுபோல், வலது கைகளில் பிடித்த துப்பாக்கி களை இடது கைக்கு மாற்றினார்கள். நவாப்ஜான், அந்த போலீஸ் அதிகாரிக்கும், பலராமனுக்கும் இடையே போய் நின்று, நிதானமாகப் பேசினான்.

"நீங்க நடந்துக்கிற முறை சரியில்ல சார். இந்தப் பொண்ணை அந்தப் பசங்க கடத்த முயற்சித்ததை நாங்க பார்த்தோம். ஒருவேளை இந்தம்மா அவங்ககிட்டே சிக்கியிருந்தால், இந்தப் பொண்ணை அடித்துக் கொன்னுருப்பாங்க... பிடித்தவங்களை விட்டுட்டு, பிடிபட்டதை அதட்ட ஒங்களுக்கு உரிமை இல்ல."

'என்னோட உரிமை. கடமையைப் பத்தி நீ சொல்ல வேண்டியதில்ல."

“ஆயிரந்தடவை. சொல்லுவேன். நாங்களும் ரயில்வே ஊழியர்கள்தான். ரயிலுலயோ. ரயில்வே ஸ்டேஷன் லயோ. திருட்டு நடந்தால். அவங்களைப் பிடித்து விசாரிக்க வேண்டியது ரயில்வே போலீஸ் கடமை. இப்போ நடந்தது திருடு இல்ல. கொள்ளையில்ல. ஒரு ரயில்வே பயணியை எங்கிருந்தோ வந்த முரடர்கள் கடத்திட்டுப் போக முயற்சி செய்தாங்க. எந்தப் பயலையும், கூடுமானவரை பாதுகாப்போடு அவங்க போகிற ரயில் நிலையத்தோட பொது எல்லை வரைக்கும் சேர்க்கிற கடமை ரயில்வே போலீசுக்கு."

"இப்போ என்ன செய்யனுங்றே.?"

"ஓங்க கடமையைச் செய்யுங்க என்கிறேன். இந்தப் பசங்களைப் பிடித்து ரயிலுல ஏத்துங்க. சட்டப்படி இப்படிப்பட்டவர்களை மிக பக்கத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கிறதுதான் ரயில்வே போலீஸ் கடமை."

"சரி. புறப்படுங்கய்யா. அந்தம்மாவும் வரணும். அவங்க திருடுவதாய் கூறப்படுற குற்றச்சாட்டையும் விசாரிக்கணும்."

இப்போது, பண்ணையாள், தாமரைப்பாண்டியனைக் கோபத்தோடு பார்த்தபடி, தமிழ்ச்செல்வியின் அருகே வந்து நின்று கத்தினான்.