பக்கம்:நிழல் முகங்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10& சு. சமுத்திரம்

"ஏய் போலீஸ் திருடனது என்று குற்றச்சாட்டு வந்தால், இந்தத் தாமரைப்பாண்டிதான் ஒருவகையில் குற்றவாளி. மலேசியாவுலே ஒகோன் னு வாழ்ந்த இந்தப் பெண்ணையும், இதோ ட குடும்பத்தையும் தமிழ்நாட்டில-குட்டாம்பட்டியில நடுத்தெருவுல நிறுத்துனவன் இவனும் இவன் அப்பனும். ஏண்டா. என்னை முறைக்கே. நீயுமாச்சு. ஒன் அப்பனுமாச்சு. ஒன்னோட சேர்ந்தால் எனக்கும் கிடைக்கும். எத்தன வருஷய்யா. ஒன்பது வருஷந்தானே.”

சர்த்ார்ஜி, சமரசக் குரலில் பேசினார். அவர் ஆங்கிலத்தில் பேசியதால், போலீஸ்காரர்கள் அடக்க ஒடுக்கமாகக் கேட்டார்கள்.

"இன்ஸ்பெக்டர் இந்தம்மா. திருடுனதாய் வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அது குட்டாம்பட்டியில் நடந்த சமாச்சாரம். ஒங்களுக்கு சம்பந்தமில்லாதது. இங்கே என்ன நடந்தது என்கிறதுதான் ஒங்க சமாச்சாரம். மிக சமீபமாய் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல இவங்களை ஒப்படைக்கணும். இதுதான் ஒங்க டுட்டி"

"ஓ.கே. ரேணிகுண்டா போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கேன். அந்தம்மாவையும் வரச் சொல்லுங்க புகார் எழுதிக் கொடுக்கணும்.”

"என்ன ஸார் நீ சும்மாச் சும்மா வம்பன் மாதிரியே பேசுறே. மிக சமீபமாய் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன். மெட்ராஸ் சென்ட்ரல்தான். ரேணிகுண்டா டவுனுக்குள்ளே இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறதுக்கு முன்னாடி, ரயிலுல சென்னை போயிடலாம்."

"நோ நோ. ரேணிகுண்டாதான்." "நை. நை. மெட்ராஸ் சென்ட்ரல்தான்."

இதற்குள் ரயில் சீக்கிரம் புறப்பட வேண்டும் என்று நினைத்த பயணிகள், நவாப்ஜான் கோஷ்டியுடன் சேர்ந்து "சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன். சென்ட்ரல்" என்று கத்தினார்கள். சில ஊர் அபிமானிகள் "ரேணிகுண்டா ரேணிகுண்டா" என்று காரணம் புரியாமல் கத்தினார்கள். ஒரே கூச்சல். இதனால் பிளாட்பாரத்திற்கு வருவதை கெளரவக் குறைச்சலாக நினைத்த ஒரு அதிகாரி, முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து இறங்கினார். முன்பு, தமிழக அரசில் எஸ்.பி.யாக இருந்தவர். சிவிலியன் ஆடையில் இருந்த அவரைப் பார்த்து ரயில்வே போலீஸார் சலூட் அடித்தார்கள். பலராமன், அவர் முன்பே பெளவியமாகப் போய் நின்றான். நவாப்ஜான், அர்த்தத்துடன் சலூட் அடித்தான். அவரும் புரிந்து கொண்டார். ஒரு தடவை, சொந்த முறையில் டில்லிக்குப் போகும்போது, டிக்கெட் இல்லாமல் அல்லாடியவர், நவாப்ஜானால் ரயிலில் இடம் பெற்றவர். நவாப் ஜான் அவருக்கருகே போய் நின்றபடி,