பக்கம்:நிழல் முகங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

நிழல் முகங்கள்

விவகாரத்தை விளக்கினான். பிறகு, "இந்த கிரிமினல் தாமரைப் பாண்டி இன்ஸ்பெக்டரைப் பார்த்து, சங்கேத பாஷையில் கண்ணடிச்சுருக்கான். இதனால இன்ஸ்பெக்டர் அய்யா சம்திங்காய் குதிக்கார்" என்றான்.

அந்த உயர் போலீஸ் அதிகாரி, இன்ஸ்பெக்டரை முறைத்தார். "அந்தப் பெண்கிட்டே கம்ப்ளெயிண்ட் மட்டும் வாங்கிக்கோ. இந்தப் பசங்களை சென்ட்ரல் போலீஸ்ல ஒப்படைச்சிடு. அப்புறம் என்னை ஆபீஸ்ல வந்து பார். ஓ.கே." என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரின் பதிலுக்குக் காத்திராமல் மடமடவென்று போய்விட்டார்.

ரயில்வே இன்ஸ்பெக்டர், அந்தப் போலீஸ் அதிகாரி மீதும், பலராமன் வகையறாக்கள் மீதும் இருந்த கோபதாபங்களை தாமரைப்பாண்டி மேல் காட்டினார். "என்னை எதுக்காகப் பார்த்துடா கண்ணடித்தே. கண்ணடிச்சே." என்று அவன் கழுத்திலும், பிடறியிலும் விளாசித் தள்ளினார்.

இந்தச் சமயத்தில் ரயில்வே கார்ட் நீட்டிய புத்தகத்தில், நவாப்ஜானும், பலராமனும் கையெழுத்துப் போட்டார்கள். எல்லோரும் ரயிலுக்குள் ஏறிக் கொண்டார்கள். கும்பலோடு கும்பலாக நின்ற டில்லிப் பெண்கள், தமிழ்ச்செல்வியை அணைத்த படியே போனார்கள்.

இன்ஸ்பெக்டர் அந்த நால்வரின் கைகளையும் பின்புறமாக வளைத்துக்கட்டி, வேறு ஒரு ரயில் பெட்டிக்குள் ஏற்றினார். ரயில்வே நிலைய அதிகாரி நீட்டிய ஒரு நோட்டு புத்தகத்தில் கையெழுத்துப் போட்ட ரயில் கார்ட், அவசரத்தில் இன்னொரு பெட்டிக்குள் ஏறியபடியே, பச்சைக்கொடியை ஆட்டினார். ரயில் சத்தம் போடாமலே புறப்பட்டது. இதனால் பலர் தடுமாறி தடுமாறி பெட்டிக்குள் ஏறினார்கள். இடறினார்கள்.

அந்த ரயிலின் எஸ். பெட்டி, மீண்டும் முழுமை பெற்றது. தமிழ்ச்செல்வி, இன்னும் பிரமை கலையாமல் பித்துப் பிடித்தவள் போலவ்ே இருந்தாள். கண்கள் குகைகள் போல் ஒளியிழந்து தோன்றின. பக்கத்துப் பெட்டியில் இருந்த மாணவர்களும், மற்ற வர்களும் அந்தப் பெட்டியின் வெளிப்புறத்தை அடைத்து நின்றபடி அவளையே வைத்த கண் வைத்தபடி பார்த்தார்கள். பலராமன் அவர்களை விரட்டினான்.

"அங்கே வந்து இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் தெரியல. வேடிக்கையா பார்க்கீங்க. இப்போ நாட்ல எல்லாமோ நல்லாத்தான் நடக்குது. போய் அங்கமுத்து தங்கமுத்து பாடலைப் பாடுங்க. போங்கய்யா. அட, கொஞ்சம் காத்து வரட்டும் போங்கய்யா"