பக்கம்:நிழல் முகங்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சு. சமுத்திரம்

எல்லோரும் போய்விட்டார்கள். எல்லாமே மாமூலாக இயங்கத் துவங்கின. தமிழ்ச்செல்வியையே உற்று நோக்கிய காஞ்சனா, "இந்த சீனிவாசனை மாதிரி ரொம்ப மோசமான பயல்களாய் இருப்பானுக போலுக்கே" என்றாள். இதற்கு எவரும் பதில் சொல்லாததால், மீண்டும் ஒரு கேள்வியை வலியக் கேட்டாள்.

"நம்ம ரயில் பயல், இந்தக் கலாட்டாவுல என்ன செய்தான்?"

"அதை ஏன் கேட்கிறீங்க. தமிழ்ச்செல்வி பிடிபட்டதைச் சொன்னவனும் இவன். இன்ஸ்பெக்டர்கிட்டே தாமரைப்பாண்டி கண்ணடித்ததையும் சொன்னவன் இவன். இவன் சொன்னதை வச்சித்தான் இன்ஸ்பெக்டரை மடக்க முடிஞ்சது."

"இவ்வளவு அநியாயம் கண்முன்னால நடந்தும் போலீஸ்காரன் நடந்துகிட்ட விதத்தைப் பாருங்க."

"இதுக்குப் பேர்தான் போலீஸ். இவங்க வச்சுருக்கிற ஆயுதங்கள் தங்களைக் காப்பாத்திக்கவும், அப்பாவிகளை மிரட்டவும்தான். தமிழ்ச்செல்வியை விசாரிக்கணுமுன்னு சொன்னான் பாருங்க"

எல்லோரும் தமிழ்ச்செல்வியையே சொல்லி வைத்ததுபோல் பார்த்தார்கள். அவளோ, குனிந்த தலையை நிமிர்த்தாமல் அந்தப் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலிருந்தாள். அவர்களுக்கு, நன்றி சொல்லவேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. நவாப்ஜான், அவள் மனப்போக்கைப் புரிந்து கொண்டான். -

"ஏம்மா. கலங்குறே. எல்லாமே நல்லா முடிஞ்சுட்டு. இன்னும் கவலைப்பட்டால் எப்படிம்மா."

“ஒன்னைத் திருடின்னு சொல்லிட்டானேன்னு வருத்தப் படுறியா?"

தமிழ்ச்செல்வி, ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள். அப்போது கண்களில் தேங்கிய நீர், அவள் பாதத்தில் பட்டுத் தெறித்தது. ரயில் பயல், மீண்டும் நரி மாதிரி ஊளையிட்டபடியே, அவள் கண்ணிரை, தன் அழுக்கு வேட்டியால் துடைத்து விட்டான். நவாப்ஜான் ஆன்மீகச் சொற்பொழிவை நிகழ்த்தினான்.

"சத்தியம் வெல்லும் என்பது நிரூபணமாயிட்டும்மா. எந்தப் தாமரைப்பாண்டி, நம் தமிழ்ச்செல்வியை குட்டாம்பட்டியில் நாலுபேர் முன்னால அடித்தானோ அவனை அல்லா அடிக்க வச்சுட்டார் பாருங்கோ. எந்தக் கைகளை நீட்டி, ஒரு அபலைப் பெண்ணை அடித்தானோ. அந்தக் கைகளை அல்லா கட்டிப்