பக்கம்:நிழல் முகங்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 111

போட்டுட்டார். தமிழ்ச்செல்வி! நீ திருட்டுப் பட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தர்மம் ஜெயிச்சதற்காகப் பெருமைப்படனும்"

தமிழ்ச்செல்வி, நவாப்ஜானை நேருக்கு நேராகப் பார்த்தாள். அவள் கண்கள், நன்றியில் நனைந்தன. அவன் சொன்னதை யோசித்துப் பார்த்து, ஆமோதிப்பது போல் தலையாட்டினாள். அந்தச் சமயத்தில் ரயில்வே போலீஸ்காரர் உள்ளே வந்தார். வந்ததும் வராததுமாக தமிழ்ச்செல்வியிடம் பேசினார்.

"எம்மா. தாமரைப்பாண்டி உங்களைப் பார்க்கணுமுன்னு சொல்லுறான். நான் முடியாதுன்னு சொன்னேன். மனுஷன் ஒரேயடியாய் அழுகிறான்."

تقعاً يع

அந்த ரயில், திருப்பதி ஆண்டவனின் ரேணிகுண்டாவைத் தாண்டி, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றா அல்லது இல்லையா என்று புராணப் பேச்சாளர்களால் உறுதியாகச் சொல்ல முடியாத திருத்தணி ரயில் நிலையத்தைக் கடந்து கொண்டிருந்தது.

கோவில் இருக்கும் இடத்தில் குடிசைகள் இருக்கும் என்பது போல், தண்டவாளக் கோடுகள் நெடுக ஒரே குடிசைமயம், தொலைவில் கம்பீரமான வேலோடு விளங்கிய கோபுரமும், மலைக்குப் போகும் படிகளும், மற்றொரு பக்கம் தார் ரோடும் மங்கலாகத் தெரிந்தன. சிலர், "முருகா. முருகா" என்று சொன்ன படியே தலையில் குட்டிக் கொண்டார்கள்.

தமிழ்ச்செல்வி, தாமரைப்பாண்டியன் துரதனுப்பிய போலீஸ் காரரை நிமிர்ந்து பார்த்தாள். அதே வேகத்தில், நிமிர்த்திய தலையை, தரை நோக்கிச் சாய்த்தாள். நவாப்ஜான், அந்த போலீஸ் மனிதரைப் பார்த்து அசல் போலீஸ்காரன்போல் அதட்டினான்.

“எதுக்காக அந்தப் பொறுக்கிப் பயலை இவங்க பார்க்கணும்? இவ்வளவு அட்டுழியம் செய்துட்டும் கூப்பிடுறான்னா. அவனுக்கு என்ன தைரியம் இருக்கணும். என்ன திமிரு இருக்கனும்?"

"திமிராய்க் கூப்புடலிங்க. அந்தப் பயலைப் பார்த்தால் நீங்களே பாவப்படுவீங்க... என் காலைத் தொட்டுக் கும்பிட்டு. அனுப்பி