பக்கம்:நிழல் முகங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சு. சமுத்திரம்

வைத்தார்னா. பாருங்களேன். என்னம்மா சொல்றீங்க...? உங்க

தமிழ்ச்செல்வி, இஷ்டப்படாதவள்போல், போலீஸ்காரரை ஏறிட்டுப் பார்க்காமலே கீழே விழுந்த பம்பரம் போல் ஒருச்சாய்ந்து உட்கார்ந்தாள். சர்தார்ஜி, அவளை ஒரு நோக்காய் நோக்கிவிட்டு, பின்னர் நவாப்ஜானைப் பார்த்துப் பேசினார்.

'எனக்கென்னமோ தமிழ்ச்செல்வி அவனைப் போய் பார்க்கிறது நல்லதுன்னு தெரியுது."

"அந்தக் கொலைகாரப் பயலையா..? கூடாது. கூடாது.”

"மாமா மகன்னு பார்க்க வேண்டியதில்ல. எதிரி எதுக்காகக் கூப்பிட்டான் என்ன நினைக்கான்னு தெரிந்து கொள்றதுல தப்பில்லையே."

'நீங்க சொல்றது ஒரு வகையில சரிதான். ஆனாலும் தமிழ்ச்செல்வியின் இஷ்டம். என்னம்மா சொல்றே.?”

தமிழ்ச்செல்வி, சர்தார்ஜியை நேருக்கு நேராகப் பார்த்தாள். நவாப்ஜானையும், பலராமனையும், பக்கவாட்டில் பார்த்தாள். அந்த ரயில் பயல், அவள் முகத்திற்கு எதிராய் நின்றபடி, போகாதே போகாதே’ என்று பாம்பு படமெடுத்து ஆடுவதுபோல் கையை ஆட்டினான். தமிழ்ச்செல்வி, சிறிது நேரம் யோசித்தாள். இப்போது அவளிடம் லேசான தெம்பு, பழையது கழிந்து புதியன புகுந்தது போன்ற தீர்க்கப் பார்வை. திட்டவட்டமாகப் பேசினாள்.

"அவனுக்கும் எனக்கும் இனிமேல் தனியாய் எதுவும் இல்லை. எது பேசணுமுன்னாலும் ஒங்க முன்னாலயே அவன் பேசட்டும். நீங்க வாரதாய் இருந்தால்."

சர்தார்ஜி, தலைப்பாகையைச் சரி செய்தபடியே எழுந்தார். பல ரா ம னு ம் , நவாப் ஜானும் கூடவே எ ழு ந் தார் க ள். தமிழ்ச்செல்வியின் பார்வைக்கு இணங்கியதுபோல், மெக்கானிக்கு நாராயணனும் எழுந்தான். ரயில் பயல், தமிழ்ச்செல்வியின் கையைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டான்.

எல்லோரும் முன்னோக்கிச் சென்ற ரயிலில், பின் நோக்கிச் சென்றார்கள். நான்கைந்து பெட்டிகளைக் கடந்தார்கள். ஒரு பெட்டியின் வாசல் பக்கம், தாமரைப்பாண்டியன், பண்ணையாள், மெட்ராஸ் வாத்தியார்', இன்னொரு மீசைக்காரன், குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கைகள், இப்போது முன் பக்கமாகக் கட்டப்பட்டிருந்தன. இரண்டு பக்கமும் இரண்டு ஆயுதப் போலீஸார் காவல் வேறு தமிழ்ச்செல்வியை மட்டும் எதிர்பார்த்த