பக்கம்:நிழல் முகங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 113

ரயில்வே இன்ஸ்பெக்டர் மெள்ள நழுவி, இன்னொரு பெட்டிக்குள் போய்விட்டார்.

தமிழ்ச்செல்வி கை கட்டப்பட்ட தாமரைப் பாண்டியனை, கண்களை உருட்டிப் பார்த்தாள். பண்ணையாளை நேராய்ப் பார்த்தாள். எதுவும் பேசாமல், சீக்கிரம் புறப்படப் போகிறவள் போல், ஒரு கால் பாதத்திற்குப் பின்னால், இன்னொரு பாதத்தை வைத்தபடி நின்றாள். சர்தார்ஜி, அவள் சார்பில் ஏதோ பேசப் போனார். அதற்குள் தாமரைப்பாண்டியன், தவளை மாதிரி, முக த் தை மு ன் னால் நி மிர்த் தி க் கொண் டு கண் ணி ரு ம் கம்பலையுமாகக் கதறினான்.

"தமிழ்ச்செல்வி. தமிழ்ச்செல்வி. நான் ஒன்கிட்ட நடந்த விதம் தப்புத்தாம்மா. ஒன்னை ஊர்ல கை நீட்டி அடித்த பாவத்துக்கு வட்டியும் முதலுமாய் வாங்கிட்டேம்மா. ஒன் காலுல வேணுமுன்னாலும் விழுறேம்மா என்னை இதோட விட்டுடும்மா. ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேம்மா."

தாமரைப்பாண்டி, கட்டிப் போட்ட கைகளை மேலே தூக்கினான். தமிழ்ச்செல்வியின் பாதங்களை நோக்கி, நகர்ந்து நகர்ந்து போனான். தமிழ்ச்செல்வி, லேசாய் விலகிக் கொண்டாள். அவனைக் குனிந்து பார்த்தாள். பா. வயை விலக்காமலே நின்றாள். பிறகு, முகத்தைத் திருப்பிக்கொண்டாள். தாமரைப்பாண்டி, பிச்சைக்காரப் பாண்டியானான்.

"பழையதை மறந்துடும்மா. எங்கப்பன் பேச்சைக் கேட்டு. கெட்டுப் போயிட்டேன், செல்வி. ஆயிரந்தான் இருந்தாலும், நான் உன் மாமா மகன். நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன். ஊருக்குப் போனதும் ஒன் சொத்து முழுசையும் தந்துடுறேன் செல்வி. தயவு செய்து கருணைக் காட்டு செல்வி என் கையெல்லாம் வலிக்கு."

பலராமன், கத்தினான். "இப்பவே வலிக்குன்னா எப்படிடா. சென்ட்ரல் வரட்டும். அங்கே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்லதானே ஒனக்கு மரியாதை இருக்குது. இப்பவே கத்துனால் எப்டி?"

நவாப்ஜான் பலராமனை அதட்டினான். 'பேசாமல் இருடா. அந்தக் கஸ்மாலத்தைப் பார்க்க கண்ராவியாய் இருக்குது."

“எனக்குக் கூடத்தான். ஆனாலும் நம்ம ஸிஸ்டரை என்ன பாடு படுத்தினான்."