பக்கம்:நிழல் முகங்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 115

$3.

"சரி. எழுதி முடிச்சுட்டு நாங்க இருக்கிற இடத்துக்கு வாங்கோ.

சர்தார் ஜியும் நவாப் ஜான் கோஷ்டியும், கட்டவிழ்த்த இ ன் ஸ் பெக் ட ைர யே சிறிது நேர ம் பார்த் து வி ட் டு , வெளியேறினார்கள். அவர்கள் தத்தம் இருக்கையில் உட்கார்ந்ததும், தமிழ்ச்செல்வி அவர்களைத் தெளிவாகப் பார்த்தாள். பலராமன் மனங்கேளாமல் கொட்டினான்.

"எனக்கென்னமோ நீ அவசரப்பட்டுட்டேன்னு தோணுதும்மா." சர்தார்ஜி, விளக்கினார்.

“எனக்கு அப்படித் தோணல. இப்போ தமிழ்ச்செல்வி சம்மதிக்கலன்னு வச்சுக்குவோம். தாமரைப் பாண்டியனை போலீஸ்ல ஒப்படைப்பாங்க. அங்கேயும் தமிழ்ச்செல்வியைத் திருடிட்டதாய் சொல்வான். ஜாமீன்ல வெளில வருவான். கோர்ட்ல வழக்குத்தான் நடக்கும். நியாயம் நடக்காது."

"நீங்க வேற. சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ் எங்களுக்கு நல்லாவே தெரிஞ்சவங்க. அங்கே இவனை விசாரிக்கிற விசாரிப்புல ஒன்று ஒன்பது வருஷம் உள்ளே போகணும். இ ல் ல ன் னா எ ல் லா ச் சொத் தை யும் சிஸ் டர் கி ட் டே கொடுத்தாகணும். எனக்கென்னமோ சமாதானத்திற்குச் சம்மதிக்கப் படாதுன்னு தோணுது."

'அவன் ஜெயிலுக்குப் போறதால தமிழ்ச்செல்விக்கு லாபமில்லே. இப்போ விட்டுக் கொடுத்தால்தான் லாபமுன்னு நினைக்கேன்."

"நான் லாப நட்டம் கருதி அவன் கட்டை அவிழ்க்கச் சொல்லல. அவனுக்காக மட்டும் அப்படிச் சொல்லல. ஏனோ அவங்களைப் பார்த்ததும் என் மனசு கேட்கல. மனசுல தோணுனதைச் சொல்லிட்டேன். தப்பாவும் இருக்கலாம். சரியாவும் இருக்கலாம். சில சமயம் நம் விருப்பத்துக்கு விரோதமாகவே எண்ணங்கள் வாரதுண்டு. அந்த மாதிரி எனக்கு இப்போ வந்துட்டு. எனக்கு எதிரி மாட்டிக்கிட்டான்னு சந்தோஷத்தான் வரணும். ஆனால், அழுகைதான் வருது. அவலந்தான் நிக்குது. எப்படின்னு சொல்லமுடியும். ஏன்னு சொல்லத் தெரியல..."

டில்லிப் பெண்களில் கல்யாணமானவள், "இதுதான் பாரதப் பெண்ணோட பண்பாடாக்கும்" என்றாள். உடனே, கல்யாணம் ஆகாத காஞ்சனா, அவள் காதில் தமிழ்ச்செல்வியை மலேசியக்காரி என்று கிசுகிசுத்திருக்கிறாள். இதனால் அவள் மீண்டும், "இதுதான் தமிழ்ப் பெண்களோட பண்பாடாகும்.” என்று திருத்தம் கொடுத்தாள்.