பக்கம்:நிழல் முகங்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 6 சு. சமுத்திரம்

மெக்கானின் நாராயணன், சர்தார்ஜியிடம் ஒரு விளக்கம் கேட்டான்.

"ஆமா எபார். இந்த தாமரைப்பாண்டிப் பயல், ஊர்ல வீராதி வீரன் மாதிரி அலட்டியிருக்கான். ரேணிகுண்டாவுல சூராதி சூரன் மாதிரி தமிழ்ச்செல்வியைக் கடத்தப் போனான். கடைசியில் அவள் காலுலயே விழுறான். இதனோட தாத்பரியம் என்ன சர்தார்ஜி..."

"நல்லா கேட்டப்பா ஒரு கேள்வி. இந்த மாதிரி ஆ ஊன்னு அலட்டிக்கிறவங்க அடிப்படையில கோழையாய் இருப்பாங்க. இப்படி மிரட்டுனவங்களை மிரட்டிப் பார்த்தால், நம் தலையைப் பிடிக்கப் போகிறவன், காலைப் பிடிப்பான். இதுதான் மனோதத்துவம். உதாரணமாய், ஒருத்தன் கத்தியைப் பார்க்கும் போதெல்லாம் பயப்பட்டால் அவனைப் பய்ந்தாங்கொள்ளின்னு உலகம் சொல்லும். ஆனால், மனோதத்துவப்படிப் பார்த்தாால் அந்த ஆசாமி மனசுக்குள்ளே யாரையோ கொலை செய்ய துடிச்சுட்டு இருக்கான்னு அர்த்தம். இப்படி கோழைகளை வீரர்கள் மாதிரியும், வீரர்களை கோழைகள் மாதிரியும், உலகுக்கு சித்தரித்துக் காட்டுறது மனோ விசித்திரம். மேடையில ரத்த ஆறு ஒடும். அப்படி இப்படின்னு முழங்கிப் பேசுற தலைவன் ஒரு கோழை. அந்தக் கோழையை வீரனாய் நினைத்து அப்பாவி மக்கள் நாட்டை அவன்கிட்டே ஒப்படைக்கிறாங்க. இந்தக் கூத்து நம்ம நாட்லயும் நல்லாவே நடக்குது. இட்லர், முஸோலினி, இவங்கெல்லாம் வீரர்களாய் காட்டப்பட்ட கோழைகள். இதனால்தான் அவங்க தலைமையேத்த ஜெர்மனியும் இத்தாலியும் அவமானப்பட்டது."

சர்தார்ஜி, இன்னும் பேசிக்கொண்டே போயிருப்பார். அதற்குள் ரயில்வே இன்ஸ்பெக்டரும், தாமரைப்பாண்டியும் உள்ளே வந்தார்கள். "நீ கொடுப்பா.." என்று இன்ஸ்பெக்டர் சொல்ல தாமரைப்பாண்டி தன் கையில் இருந்த காகிதத்தை, "இந்தா செல்வி.” என்று சொன்னபடியே, அவளிடம் நீட்டினான். அவள் அதைப் பார்க்காமலே வாங்கி கையில் வைத்துக் கொண்டாள். பிறகு, தான் ஏற்கெனவே எழுதி வைத்ததை, கரம் நீட்டிய தாமரைப் பாண்டியனிடம் கொடுக்காமல், இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தாள்.

காஞ்சனா, களுக்கென்று சிரித்தாள். உடனே எல்லோரும் அவளையே பார்த்தார்கள். சிரிப்புக்குக் காரணம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில், அவள் விவரம் கொடுத்தாள்.

"இவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடந்த ஊடலை, நினைச்சுச் சிரித்தேன். ரத்தம் தண்ணிரைவிட அழுத்தமாச்சே தாய் மாமா மகன் என்கிற பாசமோ. அத்தை மகள் என்கிற ஆசையோ போயிடுமா என்ன..? உட்காருங்க. மிஸ்டர் தாமரைப்பாண்டி"