பக்கம்:நிழல் முகங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XI

தான் தெரியும். உங்களுக்கு நூறுபேர் இல்லாவிட்டாலும், பதராக இல்லாமல், பத்து பேராவது தேருவார்கள். அதுதான் நிலைக்கும்.

இரா. பொன்னுசாமி, ஜலான் மூட்டான் மெலிங்டாங்க், மலேசியா.

米米朱米米米米米米水

தமிழ்நாட்டில் நல்ல இதயம் கொண்ட ஆயிரம் ஆயிரம் அன்புச் சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தாங்கள் அதை நினைவுபடுத்தியதற்கு மிகவும் நன்றி.

ஆமீனா பானு, தைப்பிங் பெராக், மலேசியா.

米米米米米米米米米米

தங்கள் கதை, நல்ல நடையில் அருமையாக இருக்கிறது. நானும் ஒரு எழுத்தாளி. பத்து வருடமாக எங்கள் நாட்டில் எழுத்துப்பணியில் ஈடுபட்டுள்ளேன்.

பி.கே. அஞ்சலை, பெர்லிஸ், மலேசியா.

米米米米米米米米米米

உங்களுடைய தொடர்கதையை "தமிழ் நேசன்" பத்திரிகையில்

தொடர்ந்து படித்து வருகிறேன். நல்ல முறையில் எழுதப்படும் இந்தக் கதையில், நீங்கள் குறிப்பிடுவதுபோல் சலிப்பு தட்டவில்லை.

பி. வடிவேல், மேற்கு மலேசியா,

※米米米米宋宋米米米米米米米米米米米米米宋

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/13&oldid=588156" இலிருந்து மீள்விக்கப்பட்டது