பக்கம்:நிழல் முகங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 117

தாமரைப்பாண்டி, தனது சொந்த இருக்கை மாதிரி உட்கார்ந்தான். அப்போதுதான் நவாப்ஜான் குழுவிற்கு, அந்த எண்ணம் ஏற்பட்டது. ஏன் அவங்களைச் சேர்த்து வைக்கப்படாது? அவனைப் பார்த்தால், திருந்துனவன் போலத் தோணுது. தமிழ்ச்செல்வியின் பெருந்தன்மையை இப்போ புரிஞ்சிருப்பான். நவாப்ஜான் காஞ்சனாவைப் பார்த்து, மேலும் ஏதாவது பேசும்படி சைகை செய்தான். அவளும், காதல் புரோக்கர்போல் பேசினாள்.

"தமிழ்ச்செல்வி மேடம். பழையதைக் கெட்ட கனவாய் நெனைச்சு ஒங்க மாமா மகனைப் புதுசாய்ப் பாருங்க. ஒங்க பார்வைக்காக. தவம் கிடக்கவர்போல் இருக்கார் பாருங்க."

தமிழ்ச்செல்வி, தாமரைப்பாண்டியனை ஏறிட்டுப் பாாத்தாள். பிறகு ஏதோ ஒன்றை எல்லோருக்கும் அறிவிக்கப் போகிறவள்போல், அனைவரையும் பொதுப்படையாகப் பார்த்துவிட்டு, பேசப் போனாள்.

அந்த ரயில், பம்பாய், டில்லி, கல்கத்தா ஆகிய மும்பெரும் ரயில் மார்க்கங்களுக்கும் நுழைவாயிலான பேஸின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

அரக்கோணத்தில் தூறலாக விழுந்த மழை, இங்கே புயல் மழையாகத் துள் பரப்பியது. சற்றுத் தொலைவில் தெரிந்த அனல் மின்சாரக் கோபுரங்களும், ரயில் நிலையத்திற்கு மேலேபோன சாலைப் பாலமும், மழையால் கழுவப்பட்டு மொக்கையாகத் தோன்றின. ரயில் ஊளைமேல் ஊளையாக ஒலி எழுப்பியது. ஆனால், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் அது நுழைவதற்குப் பச்சை விளக்குக் காட்டப்படவில்லை.

தமிழ்ச்செல்வி, சந்தடிச் சத்தம் அடங்கட்டும் என்பதுபோல், சிறிது காத்திருந்தாள். பிறகு, அது அடங்காத சத்தம் என்பதை உணர்ந்து, சத்தம் போட்டு மனதைத் தேங்காய்மாதிரி உடைத்துக் காட்டினாள். காஞ்சனாவை கண்களால் கண்டிப்புடனும், கண்டனத்துடனும் பார்த்தபடியே கர்ஜித்தாள்.

"மேடம். நான் மட்டமாய் இருக்கலாம். ஆனால், நீங்க நினைக்கிற மாதிரி மட்டமில்லை."

"நான் ஒங்களை மட்டம் தட்டிப் பேசலியே.?"

rち"、".