பக்கம்:நிழல் முகங்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சு. சமுத்திரம்

மெக்கானிக் நாராயணன் ஸ்பேனர் கருவிகள் கொண்ட பெட்டியைத் தூக்கினான். சர்தார்ஜி, தமிழ்ச்செல்வியின் இரண்டு கைகளையும் பிடித்தபடி, "நீ என்கூடப் பிறக்காத ஸிஸ்டர்மா. இந்தா என் விசிட்டிங் கார்ட். எந்தச் சமயத்திலயும் நீ என் உதவி கோரி வரலாம். நான் இல்லாட்டியும் ஒன் அண்ணி, ஒன்னை உபசரிப்பாள்" என்றார் தழுதழுத்த குரலில் தமிழ்ச்செல்வியால், பேச முடியவில்லை. அவர் கைகளை எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டாள். டில்லிப் பெண்கள், "எங்க வீட்டுக்கு வாங்க" என்று தமிழ்ச்செல்வியிடம் சொல்லிவிட்டு, விலாசம் கொடுக்காமலே வெளியேறினார்கள். இந்த மாதிரிச் சமயங்களில், ரயில் நிற்பதற்கு முன்னோடியாக மெள்ள நகரும்போதே, கீழே குதித்து, சுந்தரத்திடம் ஒடிப்போகும் ரயில் பயல், அவளோடு ஒட்டி இருந்தான். அவள் எழுந்தபோது கூடவே, ஒட்டியபடியே எழுந்தான்.

சர்தார்ஜி, போய்விட்டார். நவாப்ஜான், பலராமன், நாராயணன் வெளியே வந்தார்கள். தமிழ்ச் செல்விக்காகக் காத்து நிற்பதுபோல் பெட்டிக்குள் பார்த்தார்கள். அவள் கீழே இறங்கியதும், அவளை மொய்த்துக் கொண்டார்கள். மெக்கானிக் நாராயணன், தட்டுத் தடுமாறிப் பேசினான்.

"இந்த எஸ். பெட்டி ஒன் தாய்வீடு மாதிரிம்மா, நாங்கெல்லாம் ஒன்கூடப் பிறக்காத சதோதரங்க. நீ எப்போ வேணுமுன்னாலும் வரலாம். போகலாம். ஊருக்குப் போய் சொத்தைக் கேட்டுப்பாரு. ஏதாவது கஷ்டம் வந்தால். தாங்க இருக்கோம் என்கிறதை மறந்துடாதே."

தமிழ்ச்செல்வி, புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். தன்னை அறியாமலே நாராயணன் கையையும், நவாப்ஜான் கையையும் பிடித்துக் கொண்டாள். பலராமன்தான் கத்தினான்.

"சிஸ்டரைத் தங்க வைக்கிறதுக்கு ஒரு வழி செய்யாமல் ஏண்டா பிரிவுபசார விழா நடத்துறீங்க...? சே. பேஜாரு பிடிச்ச பயடா.. சிஸ்டராலே எங்கேயும் போக முடியாது.டா?"

தமிழ்ச்செல்வி, அந்த ஏழைகள். இல்லங்கள் இடி மழையில் காணாமல்போய், குடும்பங்களும், நிர்க்கதியாய் நிற்கும் என்பதைப் புரிந்து கொண்டு திடமாகப் பேசினாள்.

"நான் இன்னைய இரவை இந்த ஸ்டேஷனுக்குள்ளேயே படுத்துக் கழிச்சிடுவேன். காலையில நான் தங்கியிருக்கிற வீட்டுக்குப் போவேன். நீங்க போங்கண்ணா. ஒங்க பாசத்தை. பாச."