பக்கம்:நிழல் முகங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292ج

அந்த ரயில், பெரிய பெரிய உருளைகளும் சின்னச் சின்ன ஸ்பேனர்களும் தொழிலாளர் கூட்டமுமாய் சிதறிக்கிடந்த ரயில்வே தொழிலகத்தை தாண்டிக் கொண்டிருந்தது.

எப்படியோ மழைக்கு மாட்டிக்காமல், வழி நெடுக நேர்க்கோடாய் உள்ள கட்டிட வளாகங்கள் வழியாக உள்ளே வந்தார்கள். சுந்தரம் வழக்கமாகப் படுக்கும் அறைக்குள் ஒரு நார்க் கட்டிலைத் தூக்கிப் போட்டார். பிறகு மடித்து வைத்திருந்த மெத்தையை விரிக்கப் போனார். தமிழ்ச்செல்வி, "வேண்டாங்கையா இதுவே போதும்." என்று சொன்னபடியே கட்டிலில் போய்ச் சாய்ந்தாள். அவள் கைமடிப்பே தலையணையாகியது. சுந்தரமும், ரயில் பயலும் வெளியே வந்தார்கள். ஒரு பக்கமாக உட்கார்ந்து கொட்டும் மழையிலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். -

காலை பிறந்தது. வெயிலும் வந்தது. தமிழ்ச்செல்வி, காலை எட்டு மணியாகியும் எழவில்லை. எந்த நேரத்தில் இருக்கிறோம் என்ற கால பரிமாணத்தைக் கடந்து தூங்கிப்போனாள். அப்போது

மெக்கானிக் சுந்தரம் காக்கி டவுசரும், வலை பனியனுமாய்க் காணப்பட்டார். ரயில் பயலை இழுத்துக் கெண்டு, ஒரு குழாய்ப் பக்கம் போனார். அந்தப் பயலின் காலடியில் குத்துக்காலிட்டு, நின்றபடியே, அவன் கறைபட்ட பணியனையும், வேட்டியையும் உருவினார். சோப்பை எடுத்து, தேய்த்து தேய்த்து, அந்தத் துணி களோடு ஒரு போராட்டமே நடத்தினார். அவற்றைக் கசக்கிக் காயப் வைத்துவிட்டு, பயலை தன் பக்கமாக இழுத்து குழாய் நீருக்குள் திணித்தார். தேங்காய் நாரால் அவன் உடம்பைத் தேய்த்துவிட்டார். பிறகு, ஒரு டிரம்மில் இருந்த நீரை, ஈரச் செம்பால், மொண்டு, மொண்டு ஊத்தினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து, அவனைத் துவட்டிவிட்டு, அவனுக்காக வாங்கி வைத்த நாலு முழ வேட்டியை அவன் இடுப்பில் சுற்றப் போனார். அவனோ, அதை எடுத்து, அவர் கழுத்தில் இரண்டு பக்கமும் மாலை மாதிரி போட்டு விட்டு, காய்ந்து கொண்டிருந்த தனது வேட்டியை எடுக்க ஓடினான். சுந்தரம் அவனை விரட்டிப் பிடித்து, வேட்டியைக் கட்டினார்.

அந்தப் பயல், அந்த வெயிலிலும் வெலவெலத்து ஆடினான்.

கைகால்கள் தனித்தனியாக ஆடின. கழுத்துக்கு மேலே தோன்றிய தலை, கம்பு முனையில் குத்தி வைக்கப்பட்ட பெரிய வெங்காயம்