பக்கம்:நிழல் முகங்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 123

மாதிரி தோன்றியது. கரையான் அரித்த பூவரசு பட்டை மாதிரியான உடம்பைக் காட்டினான். கழுகு பார்த்தால் அவனைத் தைரியமாகத் துக்கிக் கொண்டு போகும். பிறகு, அவன் உடம்பெங்கும் விரவிய புண்ணையும், கட்டிகளையும் பார்த்துவிட்டு, ஒருவேளை அவனை உண்ணாமல் கீழே போடலாம்.

அந்தப் பணிமனையின் சுவருக்கும், கல்நார் கூரைக்கும் இடையே தோன்றிய புறாக்களை கண்விழித்துப் பார்த்த தமிழ்ச்செல்வி, அந்தப் பயலின் நரங்கு உடம்பை சுந்தரம் தேய்த்து விட்ட நேர்த்தியையும், புதிய வேட்டியை யார் அணிவது என்று அவர்களுக்கு இடையே நடந்த செல்ல விளையாட்டையும் ரசித்த படியே, எழுந்து உட்கார்ந்து மலேயாவில் தனது தாத்தா, தன்னை இப்படிக் குளிப்பாட்டியதை நெஞ்சுருகி நினைத்துப் பார்த்தாள்.

இதற்குள் தொழிலாளர்கள், ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் பட்டுச்சாமி. சமீபத்தில் தான் அரக்கோணத்தில் இருந்து இங்கே மாற்றப்பட்ட கிழடு. எடுத்த எடுப்பிலேயே கேட்டார், கண் சிமிட்டலோடு கேட்டார்.

"சுந்தரம். ஒன் பிள்ளிங்களை அவங்க வரும் போதெல்லாம் துரத்துவே. கையில ஒரு அழுக்குப் பட்டாலே சூள் கொட்டுவே. இந்தச் சிரங்குப் பயலை என்னடான்னா இப்படிக் குளிப்பாட்டுறே. இதுக்கு என்னப்பா காரணம்...? ஏதாவது விசேஷ தாரணம் இருக்கணும். சும்மா சொல்லுப்பா. இந்தப் பொண்ணு யாருப்பா. சொல்லுப்பா. சும்மா."

"இந்த மனுஷன் என்னத்த சொல்லுறது? நானே சொல்லுறேன். ஏண்டி குடியைக் கெடுப்பாள். இலைமறைவு காய்மறைவாய் இருந்துட்டு, இப்போ இங்கேயே வந்துட்டியா?”

தமிழ்ச்செல்வி உட்பட, எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். நாற்பத்தாறு வயதுப் பெண் ஒருத்தி. ஆங்கார ஓங்காரமாய் நின்றாள். பிறகு, தமிழ்ச்செல்வியைப் பயங்கரமாய்ப் பார்த்தபடியே, அவள் இருக்கும் அறையை நோக்கி நடந்தாள். கீழே கிடந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டாள்.

அந்த ரயில்வே பணிமனையில் சுத்தியல் சத்தங்கள் ஒருவித பயங்கரமான பின்னணியைக் கொடுத்தன. திரைப்படங்களில் கொடுர சம்பவங்களுக்கு முன்னோடியாக வருமே, இசைக் கருவிகளின் பரபரப்பு ஒசை. அப்படி. ஒய்யாரமான காரியங் களுக்குப் பின்னால், எவ்வளவு பெரிய உழைப்பு, எத்தனை பெரிய கரங்கள் பின்புலமாக உள்ளன என்பதற்கு எடுத்துக் காட்டான, பல தொழிலாளர்கள், ரயில் சக்கரங்களைக் குடைந்து கொண்டும்,