பக்கம்:நிழல் முகங்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 125

தமிழ்ச்செல்வியின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை, அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போன்ற பார்வை. அதுவே. படிப்படியாக மருட்சியாகி, வாயைத் திறக்க வைத்து, கண்களை உருட்ட வைத்து, கையை முன் தலையில் படர வைத்து, உடம்பை சூன்யம்போல் ஆக்கி வைத்து, அவளை அதிர வைத்தது. தலைமுடியைப் பின்னப்போன அவள், இப்போது, தலையையே பின்னுபவள்போல் தோன்றினாள்.

"சபையைக் கூட்டிவிட்ட திருப்தியில், இரும்புக் கம்பிக்காரி, வழக்குத் தொடுத்தாள்.

"பாருங்கய்யா. இந்த அநியாயத்தை. இந்தப் பயல் ஏழு வருஷத்துக்கு முந்தி எப்போ ஆமை மாதிரி இவர்கிட்டே வந்தானோ. அப்பவே. இவருக்கு நானும். எனக்கு அவருமாய் செத்துப் போயிட்டோம். இன்னைக்கு வீட்ல ஒரே மழைக்காடு. கணுக்கால் அளவுக்குத் தண்ணி பெருகி, என் பயல்களோட புத்தகங்க நனைஞ்சுட்டு. எங்கேயோ போன மூத்த பயல் இன்னும் வீட்டுக்கு வரல. எந்த மழையில சிக்குனானோ. எந்த இடியில விழுந்தானோ... இந்த மனுஷன் என்னடான்னா பெத்த பிள்ளைகளைப் பத்திக் கவலைப்படாமல், போன மகன் செத்தானா இருக்கானான்னுகூடத் தேடாமல் இந்த பன்றிப் பயலை கூட்டிட்டு வர ஸ்டேஷனுக்குப் போயிருக்கார். போதாக்குறைக்கு இவளையும் கூட்டிட்டு வந்துட்டார். இதுக்கு என்னய்யா அர்த்தம்...? சொல்லுங்கய்யா. இவளுக்கும், அவனுக்கும் பிறந்த பயல் இவன்னு தானே அர்த்தம்? இதனாலதானே இந்த மனுஷன் இந்த சிரங்கனை குளிப்பாட்டுறார். குலாவுகிறார். இவனே வேற பையனாய் இருந்தால் செய்வாரா. கிட்டத்தான் போவாரா. இப்போ. அம்மாவையும் கூட்டிட்டு வந்தாச்சு. நடக்கட்டும். நடக்கட்டும்.”

எல்லாத் தொழிலாளர்களும், அவள் சொல்வதை மெளனமாகக் கேட்டார்கள். தமிழ்ச்செல்வி, அந்த அறையில் இருந்து வெளியேற நினைத்தாள். ஆனால், அந்தம்மா வாசலை மறைத்து நின்றதால், நின்ற இடத்திலேயே நிலையிழந்து நின்றாள். சுந்தரம் குத்துக்காலிட்டு உட்கார்ந்து தலையில் கை வைத்தார். கடந்த ஆறேழு வருடங்களாக, அவள் அந்தப் பயலை சாடை மாடையாகத் திட்டியிருக்கிறாள். ஆனால் இப்படிப்பட்ட வார்த்தைகளை அவள் கொட்டியதில்லை.

சுத்தரத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருந்த தொழிலாளர்களில் ஒருவர், அவளிடம் அமைதியாகச் சொன்னார்.

"அக்கா. சுந்தரண்ணனை இப்படித் தராதரம் தெரியாமல் பேசுறது தப்பு. அவரைப் பார்த்தாலே தப்பு செய்யத் தோணாது. எங்களுக்கு அப்படிப்பட்ட பெரிய மனுஷ அவரு”