பக்கம்:நிழல் முகங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள்

′2لاقهم

Liருவம் பனிக்காலம். சூரியன் நிலவுபோலக் குளுமையாகப் பார்வை காட்டிய நாக்பூர் ரயில் நிலையம்.

அந்த சூரியப் பார்வையை கண்டு, பதிலுக்குக் கண்ணடிப்பது போல் ரெயில் நிலையக் கட்டிடத்தை ஒட்டியிருந்த எடை எந்திரத்திற்குள் வட்டமான வண்ணத் தகட்டில் மின்னொளி அணைந்து மின்னியது. மின்னி மின்னி அணைந்தது. அதன் எதிர்த் திசையில் டில்லியிலிருந்து ஓடி வந்த துரிதரயில் சென்னையை நோக்கி முகம் வைத்து இளைப்பாறிக் கொண்டிருந்தபோது

ஆகாயப் பந்தல் ரயில் பாலங்களுக்குக் கீழே, மக்கள் அலைமோதிக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில் வடபுலத்திற்கும், தென்புலத்திற்கும் நடுவில் நாக்பூர் இருப்பதால், கூட்டத்தில் குல் லாய்கள், தலைப் பாகைகள், சர்தார் கொண்டைகள், முக்காடுகள், முழுத்தலைகள் ஆகியவை தனித்தனியாகவும், இரண்டறக் கலந்தும் காணப்பட்டன.

பதினைந்து நிமிடம் வரை எல்லாமே, நிதானமாகவும், நிம்மதியாகவும் நடப்பது போலிருந்தது. பிளாட்பாரத்தில் நடமாடியவர்கள் அனைவருமே, அங்கேயே தங்கப் போகிறவர்கள் போல் நிதானமாய்த் திரிந்து கொண்டு இருந்தார்கள். அப்போது

தொலைவில் பச்சை வண்ணம் பளிச்சிட்டது. பெளர்ணமி நிலவுக்குப் பச்சை வண்ணம் தீட்டியதுபோல், துரத்து ரயில்விளக்கு மின்னியது. சீருடை தரித்த ரயில்வே அதிகாரி ஒருவர், தமிழகத்துத் தொண்டர்கள் போல், பச்சைக்கொடி பிடித்த கரத்தை உயர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/14&oldid=588158" இலிருந்து மீள்விக்கப்பட்டது