பக்கம்:நிழல் முகங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 127

"நமக்கும் ஒரு மகள் இருக்கிறாள் என்கிறதை மறந்துடாதடி. பாவம் மலேசியாவுல கொடி கட்டி வாழ்ந்துட்டு. இப்போ இந்தப் பயலை மாதிரியே அனாதையாய் நிற்கிறவள்டி இவள். எனக்கு இவளும் மகள் மாதிரிதான். அவளைத் தப்பாய்ப் பேசினே. ஒன் வாய் அழுகிடும்."

அந்தம்மா, கணவரிடம் தீவிரமாகப் போர் தொடுக்க, அந்த வாசல்படியில் இருந்து, அவரருகே நகர்ந்தாள். இதைப் பயன்படுத்தி, தமிழ்ச்செல்வி, தலையை முழுவதுமாக மூடிக் கொண்டு வெளியே வந்தாள். எல்லோரையும் வேலிக்குள் சிக்கிய ஆடு மாதிரிப் பார்த்துவிட்டு, மடமடவென்று ஓடினாள். உருவம் தெரியாதபடி ஓடினாள். ரயில் பயல் "அம். அம்." என்று மனசுக்குள் கூவியபடியே அவள் பின்னால் போகப் போனான். பிறகு, "அப்" சுந்தரத்தின் அருகேபோய் அவர் முகத்தைப் பார்த்துவிட்டு, அவரை அந்த நிலையில் விட்டுவிட்டுப் போக, அவனுக்கு மனம் வரவில்லை. பணி மனையில் விசாலமான வெளிவாசலில் நின்றபடியே உள்ளேயும், வெளியேயும் மாறி மாறிப் பார்த்தான். அப்போது, சுந்தரத்தின் மனைவி, கொடுரமாக வர்ணனை கொடுத்தாள்.

“வைப்பாட்டியை மகள்னு சொல்லிட்டாரேன்னு எப்படிக் கோபமாப் போறாள் பாருங்க! கட்டுன பொண்டாட்டியயும். பெத்துகிட்ட பிள்ளிகளும் தாழ்த்தி. அவளும். இந்தப் பயலும் ஒசத்தி. கடவுளே. கடவுளே."

'சொல்றதே சொல்றதே. சாத்தானே. சாத்தானேன்னு சொல்லுடி”

"ஒஹோ. அந்த அளவுக்கு நான் தாழ்த்தியாயிட்டேன். என் பிள்ளிக மட்டமாயிட்டு”

"ஆமாண்டி. இந்தப் பயல். ஒன்னைவிட நான் பெத்த பிள்ளைகளைவிட உசத்திதாண்டி. நீ நினைக்கிற பாசம். ரத்த உறவுல. வாரதுடி. எலும்பு சதையில வருகிற அன்பு அந்த எலும்பு மாதிரி முறியும். அந்த சதை மாதிரி வாடும். இந்த வகை ஊன அன்பு உடம்பு மாதிரி வாடக்கூடியது. ஆனால், எனக்கும் இவனுக்கும் உள்ள உறவு. ரத்த சம்பந்தம் இல்லாதது. அதே சமயம். ரத்த வோட்டமானது. உடம்புக்கும். ஆன்மாவுக்கும் சம்பந்தமில்லன்னா. ஆன்மா அழியாதுன்னா. இவன் கிட்டே நான் கொண்ட உறவு உடம்பை உதறிப் போட்ட ஆன்மா மாதிரி. நீ எப்படிக் குதித்தாலும் சரி. இவனையும் என்னையும், உன்னாலயும் யாராலயும் பிரிக்க முடியாது."

"நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இவன் மேலயும், அவள் மேலயும், இப்படிப் பாசம் வச்சிருக்கிற மனுஷனால வயசுக்கு வந்த