பக்கம்:நிழல் முகங்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 க. சமுத்திரம்

மகளோட கல்யாணத்தை யோசிக்க முடியாது. நேரம் கிடைக்காது. அதனால். நீங்கதான் எனக்கு ஒரு வழி சொல்லணும்."

கூட்டத்தைப் பார்த்துக் கேட்டவளுக்கு, கூட்டத்தில் ஒருத்தர் பதிலளித்தார்.

"நாங்க சொல்ற வழி. அதோ அந்த வழிதான். திரும்பிப் பாராமல் நடம்மா. பொம்புளையாம். பொம்புளையாம். பேச்சுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம்? முந்தா நாள் கூட சுந்தரண்ணன் ஒன் மகளுக்கு ஒரு பையனைப் பார்க்க என்னைக் கூட்டிப்போனார். பேசாமல் நடம்மா. கூட்டம். சுந்தரண்ணனுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஒன்னை சும்மா விடுது. இவர் இப்பவும் ராமன்தான். நாளைக்கும் ராமன்தான். ஆனால் நீதான். சீதையாய் இல்லாமல் போயிட்டே போம்மா. போ"

சு ந் தர ம் ம ைன விக்கு , அவர்கள் ஒவ்வொரு வரும் தமிழ்ச்செல்வியாகவும், ரயில் பயலாகவும், இரட்டை உருவங் களாகத் தெரிந்தன. தலைதெறிக்க வெளியே ஒடினாள்.

சுந்தரம், மீண்டும் குத்துக்காலிட்டு உட்கார்ந்தார். அவமானச் சுமையைத் துக்கிக் கொண்டிருப்பவர்போல், இரண்டு கைகளையும், தலைக்குமேல் தூக்கி, கோர்த்துக் கொண்டார். தொழிலாளர்கள், அவரையே பார்த்தபடி நடந்தார்கள். அவரிடம் ஆறுதலாகப் பேசப் போனவர்கள், அவர் நிலையைப் பார்த்துவிட்டு, தத்தம் வேலையைப் பார்க்கப் போயிட்டாங்க. ரயில் பயல் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தான். "அப். அப்." என்று சொன்னபடியே அவரை வட்ட மடித்தான். திடீரென்று, அவனுக்கு தமிழ்ச்செல்வியின் நினைவு வந்தது. எங்கே போனாளோ.. எப்படிப் போனாளோ. 'அம். அம்." என்று சுந்தரத்திடம் சொல்லிப் பார்த்தான். அவர் கேட்கும் நிலையில் இல்லை.

சிறிது யோசித்தபடியே நின்ற பயல், ஒரு முடிவுக்கு வந்தான். "அம்"வை எப்படியும் பார்த்தாக வேண்டும். அவன், அந்தப் பணி மனையைவிட்டு, வெளியே வந்தான். அப்பாவை அந்த நிலையில் விட்டுவிட்டுப் போவதா என்று சிந்தித்து, வாசலில் நின்றான். பிறகு, மான் பாய்ச்சலில் ஓடினான். கரடுமுரடான ஒரு கிலோ மீட்டர் தூரத்தைத் தாவித் தாவி ஓடி ஒடிக் கடந்து, பொது மருத்துவ மனைப் பக்கம் நெடுக உள்ள பஸ் நிலையங்களைப் பார்த்தான். அம்மாவைக் காணோம். பிறகு, அவள் வண்ணாரப் பேட்டையில் இருப்பதாய்ச் சொன்னது நினைவுக்கு வரவே, கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் பஸ் நிலையம் வந்தான். காணவில்லை. அவன் விடவில்லை. அந்தக் கட்டிடத்திற்கு அடுத்த சாலைக்குப் போனான். துருவித் துருவிப் பார்த்தான். கிடைக்கவில்லை.