பக்கம்:நிழல் முகங்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் மூகங்கள் 129

பின்னர், சலிப்போடு, தன்னைத்தானே வெறுத்தபடி, ரயில் நிலையத்தின் பக்கவாட்டு வாசல் வழியாக, உள்ளே போகப் போனான். "டேய். டேய்." என்று ஒரு சத்தம். யானைக்கவுணி போலீஸ் சாலையோர பஸ் நிலையத்தில் பழக்கப்பட்ட சத்தம். அந்த்ப் பயல் திரும்பிப் பார்த்தபோது, தமிழ்ச்செல்வி அவனை நோக்கி ஓடி வந்தாள். "நீ எப்படியும் என்னைப் பார்க்க வருவேன்னு எனக்குத் தெரியும். அதனால்தான் இங்கே நின்றேன்." என்று சொன்னவளின் இடுப்பில் கைகோர்த்து, அவள் மார்பில் சாய்ந்து கொண்டான். தமிழ்ச்செல்வி அவன் தலையை நிமிர்த்தித் தோளிலே கைபோட்டுப் பேசினாள்.

"ஒன்னை நான் மறக்கவே மாட்டேண்டா. ஊருக்குப் போறேன். தாமரைப்பாண்டி. சொத்து கொடுப்பான்னு போகல. எங்கம்மா. மடியில தலை வைத்து அழனும். அம்மா. அவள் கேட்கிற நிலையில் இருக்காளோ இல்லியோ. நான் அழணும். அம்மாவை பார்க்கதே ஒரு ஆனந்தண்டா. ஏ.ண்டா. அப்படிப் பார்க்கே. அவங்க எனக்கு அம்மான்னா. நான் ஒனக்கு அம்மாடா”

அந்தப் பயல். தமிழ்ச்செல்வியை, இறுக்கிப் பிடித்தான். அவள், அவன் தலையைக் கோதிவிட்டபடியே, "நம்மை மாதிரி ஆட்கள், நமக்குக் கொடுமைகள் வரும்போது, அது யாரோ எவருக்கோ வாரது மாதிரி நினைச்சுப் பழகனும் நான் ஒன்னைப் பார்க்கனும் என்கிற ஒரே காரணத்துக்காவது அடுத்த வாரம் இங்கே வருவேன். எஸ்1க்கு வருவேன். வாறேண்டா"

அங்கே இருந்த பல்லவ பஸ் இருவரையும் பிரித்தது. ரயில்பயல், கண்களில் வழிந்த நீரை, வீறாப்பாய்த் துடைத்துக் கொண்டான். அப்பா சுந்தரம் இருக்கும் பணிமனையை நோக்கி நடக்கப் போனான். திடீரென்று ஒரு யோசனை. அவரோட மகளோட கல்யாணம், என்னால் தடைபடுதாமே... என்னால்தானே. அப்பாவை அந்த காளியாத்தா அப்படிக் கஷ்டப்படுத்தினாள். நான் அப்பாவை. அவரோட நன்மைக்ககப் பார்க்கக்கூடாது. அவர் நல்லா இருக்கணும். அப்படின்னா. நான் பார்க்கக்கூடாது."

அந்தப் பயல், காலை மாற்றிப் போட்டான். கால் போன போக்கில், கண்காட்டிய வழியில் தடந்தான். எவ்வளவு நேரம் நடந்தானோ உச்சி வெயில் உறைத்தது. அது உஷ்ணப்படுத்தாது போல் நடந்து நடந்து, ஒரு ரயில்வே பாலத்திற்கு அருகே வந்தான். அங்கே மெதுமணல் உள்ள இடத்தில் ஒருத்தி, ஒரு குழந்தையை வைக்கிறாள். அவனைப் பார்த்ததும், குழந்தையை விட்டு விட்டு ஒடுகிறாள்.