பக்கம்:நிழல் முகங்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சு. சமுத்திரம்

ரயில் பயலுக்கு வெறி வந்தது. கைப்பந்து மாதியான ஒரு உருண்டைக் கல்லைத் தூக்கிக் கொண்டு, அவளைத் துரத்திக் கொண்டு போனான்.

இ2

அரக்கோணம் வழியாக வந்த பம்பாய் ரயிலும், எண்ணுளர் வழியாக வந்த டில்லி ரயிலும், கட்டாந்தரையில் இரும்புக்கோடுகள் போட்டது போன்ற தண்டவாளங்கள், வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருந்தன.

இவற்றை முந்தியடித்து மின்சார ரயிலொன்று மூக்கு முட்டும் வேகத்தில் தக்காரும் மிக்காருமின்றி தடம் புரளாமல் ஓடியது. இடையிைேடயே அரைகுறை தண்டவாளங்களில் எஞ்சின்கள் இல்லாத ரயில் பெட்டிகள் தொலைதூரத்தில் ராட்சஸக் கம்பளிப் பூச்சிபோல் தோன்றிய அந்த வேளையில் லி

ரயில் பயல் கல்லை வைத்துக் கொண்டே, அவள் பின்னால் ஒடினான். ஊளையிட்டபடி உள்ளுர அழுதபடி ஒடினான். அவனுக்கு ஒடஒட உடல்பலம் கூடியது. மனதுக்குள் குமைந்து கொண்டிருந்த உணர்வுகள், கோபதாபங்கள், கால்களுக்கு வேகத்தைக் கொடுத்தன. கண் மண் தெரியாத கோபம், கைக்கு வலுவைக் கொடுத்தது. அவன் நினைத்திருந்தால், அந்தக் கல்லை எடுத்து, கறுப்புத்திரை போட்டது மாதிரியான அவள் பிடறியைப் பிய்த்திருக்கலாம். ஆனால், அவனுக்கு மனது கேட்கவில்லை. எறியலாமா வேண்டாமா என்று யோசித்து அவன் வேகத்தைத் தணித்தபோது, அவன் தன்னை, அடையாளம் காணக்கூடாது என்று நினைத்தோ என்னவோ, திரும்பிப் பாராமல் ஒடினாள். ரயில் வளாகத்தின் நீண்ட நெடிய வேலிச்சுவர் ஒரமாக ஒடிக் கொண்டிருந்தாள். அந்தப் பயலோ, அவள் பின்னால் குறுக்கும் நெடுக்குமாக ஓடினான். அவள் வேலிச் சுவரில் ஏறிக் குதிக்கப் போனாள். அது முடியாமல் போகவே, மீண்டும் சுவரோரமாக ஓடினாள். அவளைத் தனித்துப் பிடிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பயல், உதவிக்கு ஆள் கிடைக்குமா என்பதுபோல் திரும்பிப் பார்த்தான். அப்போது

அந்தப் பாலத்திற்குக் கீழே அந்தக் குழந்தை, ஒரு கையை வயிற்றில் குறுக்காக மடித்துக்கொண்டு, இன்னொரு கையை