பக்கம்:நிழல் முகங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 131

வளைத்தபடி தோன்றியது. அதன் வாய் பிளந்திருந்தது. அழுகிறதோ, சிரிக்கிறதோ. சிரிப்பு என்ன சிரிப்பு. இப்படிப்பட்டவளுக்குப் பிறக்கும் குழந்தை பிறப்பில் இருந்தே அழ வேண்டியதுதான். தன்னைப் பார்த்து, பிறர் காட்டும் பரிகாசச் சிரிப்புத்தான், அது பார்க்கப் போகும் சிரிப்பு.

ரயில் பயல், திடுக்கிட்டான்.

இரண்டு நாய்கள், அந்தக் குழந்தைக்கு இரண்டு பக்கமும் நின்றன. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டன. குழந்தையைப் பார்த்த கண்ணோடு, ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. பிறகு சொல்லி வைத்ததுபோல், இரண்டு நாய்களும் அந்தக் குழந்தையை நோக்கி, முன்காலில் ஒன்றைத் துக்கி வைத்தபடி பார்த்தன. இரையைப் பார்க்கும் பார்வை அது. என்ன செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வரப்போகும் கால்துக்கல். பின்னர் அவை முடி வெடுத்தவைபோல் அந்தக் குழந்தையை நோக்கி, மெள்ள மெள்ளக் கால்களை நகர்த்தின.

ரயில் பயல், துடித்துப் போனான். இப்போது கோட்டைச் சுவரில் கஷ்டப்பட்டு ஏறிக் கொண்டிருந்தவளைப் பற்றிக் கவலைப் படாமல், வந்த வழியாக ஓடினான். நெருஞ்சி முள்களில் கால் பதிந்து, சரளைக் கற்களில் தடம் போட்டு, கால்களைச் சக்கர மாக்கினான். அந்த நாய்களைப் பார்த்து, கைகளை ஆட்டியபடி நரிபோல் ஊளையிட்டு, நான்கு கால் பாய்ச்சலில் பாய்கிறவன் போல் கைகளிரண்டை நீட்டியும், குவித்தும், ஒடினான், வயிற்றில் இருந்து வாய்க்கு வந்த மூச்சை வழிமறித்து, வழியடைத்து ஓடினான்.

நாய்கள், அந்தக் குழந்தையை நெருங்க நெருங்க, அவனுக்கு தன் உயிரே விலகிக் கொண்டிருப்பது போலிருந்தது. கொலைத் துரத்தலில் இருந்து தப்பிக்கத் துடிப்பவர்கள் ஒடுவது மாதிரியான ஒட்டம். குழந்தையின் உடம்பில்தான் தன் உயிர் இருப்பது போன்ற பாய்ச்சல், ரயில்கூட போட்டி போட முடியாத ஒட்டம். கூச்சல் போட்டால் ஓட முடியாது. ஒடினாலோ கூச்சல் போட முடியாது. ஆனால் இவன் இரண்டையும் செய்தான். அவன் போட்ட கூச்சலில் குழந்தையைச் சுற்றி வியூகம் போட்ட நாய்கள் காதுகளை நிமிர்த்தி அவனைக் கண்டிப்புடன் பார்த்தன.

இதற்குள் அவன் நெருங்கி விட்டான். அப்போதும் அந்த நாய்கள் அவன் உடம்பைப் பார்த்தோ என்னவோ, இவன் எம்மாத்திரம் என்பதுபோல் குரைத்தன. அவனையும் தாக்கிப் பார்க்கலாம் என்பதுபோல், ஒரு காலைத் துரக்கிக் காட்டின. இதற்குள் அந்தப் பயல், எவளைத் தாக்குவதற்காகக் கையில் கல்