பக்கம்:நிழல் முகங்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சு. சமுத்திரம்

வைத்திருந்தானோ, அந்தக் கல்லை எடுத்து, வீசினான். அது குறி தவறி விழுந்ததும், கீழே குனிந்து கருங்கற்களைப் பொறுக்கினான். ஒரு நாயை தன் அம்மாவாகப் பாவித்தவன்போல் வேகமாக எறிந்தான். இன்னொன்றை, அதோ சுவரேறிக் குதிக்கும் அவளாகப் பாவித்து உதைப்பதற்காகக் காலைத் துக்கினான். அத்த நாய்கள் "அடங்கி விட்டோம், அடிக்காதே’ என்று தங்கள் இனத்துக்கே உரிய பாஷையை வெளிப்படுத்தின. அதாவது வாலை, பின்னங் கால்களுக்கு இடையே சொருகியபடியே ஓடின.

அந்தப் பயல், அந்தக் குழந்தையைப் பார்த்தான். கிராமத்து மண்ணிலே தெரியுமே, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேரோடும் வேரடி மண்ணோடும். அது மாதிரியான நிறம். பொக்கைவாய், உருண்டு திரண்ட உடம்பு. வாட்டமான முகம். பிறந்தமுடி எடுக்காததுபோல் பின்னால் நீண்ட முடி எக்கிய வயிறு. கழுத்திலே முடிச்சுபோட்ட கறுப்புக் கயிற்றில் ஒரு தாயத்து. மிஞ்சி மிஞ்சி இருந்தால் ஒரு வயது இருக்கலாம். "ம்மா. ம்மா." என்று வீறிட்டுக் கத்திக் கொண்டிருந்தது. தொலைவிலே தெரிந்த உருவத்தை, உற்றுப் பார்ப்பதுபோல் கைகளை நீட்டி, கண்களைப் பிதுக்கியது. அதன் பார்வையிலே, ரயில் பயல் அந்த தூரத்துச் சுவரைப் பார்க்கிறான். அதிலே அவள் ஏறி நிற்கிறாள். அவனையும் அந்தக் குழந்தையையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறாள். ரயில் பயல், அவளைப் பார்த்து, இங்க வா. வா. என்று கையாட்டிப் பார்க்கிறான். அவளோ மறுபுறம் குதிக்கிறாள்.

ரயில் பயல், அவள் திசையைப் பார்த்துக் காறித் துப்பினான். அதோ ஒடுகிற நாய்கள்கூட தங்கள் குட்டிகள் சுயாட்சி பெற்ற பிறகுதான் அவற்றை விடுகின்றன. கோழிகட, குஞ்சு பெரிதாகி கழுகுகளாலோ, கருடன்களாலோ தூக்க முடியாத கனத்திற்கு வந்த பிறகுதான், அவற்றைக் கொத்தி விரட்டுகிறது. மாடுகள் கூடக் கன்றுகள், காளைகளான பிறகுதான் முட்டித் துரத்துகிறது. ஆடும், ஆட்டுக்குட்டியும் அப்படியே.

ஆனால் இந்த மனிதக் குட்டியை - பால்மணம் கொண்ட பச்சை மழலையை விட்டுவிட்டுப் போகிறவள் கோழியை விடக் குறு கிப் போனவள். மாட்டை விட மடங்கிப் போனவள். இப்படிப்பட்டவள் எப்படிப்பட்டவளாக இருப்பாள்..? என் அம்மா மாதிரிதான் இருப்பாள். ஒருவேளை இவளே என் அம்மாவாக இருப்பாளோ? என்னையும் இவள்தான் இப்படிப் பெற்றுப்போட்டு விட்டுப் போயிருப்பாளோ. சினிமாவில் வருவது மாதிரி என் தம்பியை நானே காப்பாற்றும் விதிமுறை வந்திருக்குமோ... பின்பக்கமாகப் பார்த்தால். அவள் அடையாளம் தெரியவில்லை. ஆனால் அந்த விரித்த தலையும், பருத்த பிடறியும் அம்மா போலவே