பக்கம்:நிழல் முகங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 133

தெரியுது. ஒருவேளை. சீ. அவள் அம்மாவாக இருந்தாலும், அவள் நினைப்பே வரக்கூடாது:

ரயில் பயல், அந்தக் குழந்தையே வெறித்துப் பார்த்தான். அதன் கண்களிலே குட்டைக் கன்னங்களில் கரைகாட்டும் நீர்த்துளிச் சுவடுகள். அழுதடங்கிப் போய் அழமுடியாத நிலைக்கு வந்தது போல் ஏங்கியது. அதன் புலம்பல்கள் வாய்க்குள் இருந்து, தொண்டைக்குள்ளேயே திரும்பிப் போயின. திடீரென்று, அவன் நிற்பதை அப்போதுதான் பார்ப்பதுபோல் அதன் கழுத்து நீண்டது. கண்கள் அகலமாய், கலங்கிய பின் கண்ணிர் கன்னத்தில் இறங்கியது. அந்தக் குழந்தை அவனையே பார்த்தது. "என்னை எடுத்துக்கோ" என்பது மாதிரி கை நீட்டியது. அதிகநேரம், அப்படி அந்தக் கைகளை அதனால் வைத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் அதைக் கீழே போட்டது. போட்ட வேகத்திலே அவனை நோக்கி, பழையபடியும் கைகளை நீட்டி, "இங்கா. இங்கா." என்றது. "இங்கா நான் பிறந்தேன். என்கிறதோ.. இங்கே வா என்கிறதோ..."

ரயில்பயல், அழுதுவிட்டான். அனாதரவான அந்தக் குழந்தை அனாதையான தன்னை அப்படி உரிமையோடு, கைநீட்டிக் கேட்டதால், ஏற்பட்ட இன்ப அழுகையும், இந்த நிலைக்கு போயும் போயும் தன்னிடமே அடைக்கலம் கேட்கும் அழுகையும் வந்ததால் ஏற்பட்ட அழுகையும் அவனை மாறி மாறி அலைக்கழித்தன. குழந்தையிடம் ஒடிப் போனான். கீழே குனிந்து உட்கார்த்தான். அந்தக் குழந்தையை, தன் முகத்தோடு முகமாக, கழுத்தோடு கழுத்தாக கையோடு தலையாக, அனைத்துக் கொண்டான். அந்தக் குழந்தையின் கன்னத்தில் வடிந்த நீர், அவன் கன்னத்தை நனைத்தது. அதன் கழுத்தில் வடிந்த நீர், அவன் கழுத்தில் வழிந்தது. பிறகு, தனது கண்ணிர்ச் சுமையை, அவனிடம் பகிர்ந்து கொண்டது போலவும், அவனை நோக்கி, லேசாய் சிரித்தது. தொட்ர்ந்து சிரித்தது.

அந்தக் குழந்தை சிரிக்கச் சிரிக்க, அவன் அழுதான். தொடர்ந்து அழுதான். விம்மலாகவும் வெடிச்சத்தமாகவும் அழுதான். பிறகு தன்னையே நம்பும் அந்தக் குழந்தையின் முன்னால், பலவீனப்பட விரும்பாதவன்போல், கண்ணிரைத் துடைத்து, தன்னை வைராக்கியப்படுத்திக் கொண்டான். அந்தக் குழந்தையைச் சற்றே தள்ளி வைத்தான். அது அழப்போனபோது, உடனே அவன், கைகளை ஆட்டி, நரியாக ஊளையிட்டு, தந்தைபோல் தலை ஆட்டினான். பாலமுருகன் கைகாட்டுவதுபோல் தனது கையைக் காட்டினான். அந்தச் சமயம் பார்த்து, அந்தக் குழந்தை சிரித்தது. உடனே அவன் அதை வாரியெடுத்தான். கன்னத்திலும், கழுத்திலும் மாறிமாறி முத்தமிட்டான்.

r$. įo .