பக்கம்:நிழல் முகங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 க. சமுத்திரம்

போய், கீழே உட்கார்ந்தான். குழந்தையை மடிக்குக் கொண்டு வந்து, படிப்படியாக அடுத்த இடுப்பிற்கு இடமாற்றம் செய்துவிட்டு, அந்தத் தந்திக் கம்பத்தைப் பிடித்தபடியே எழுந்தான். நடந்தான்.

அந்தக் குழந்தையை எங்கே வைக்கலாம், எப்படி வைக்கலாம் என்று நினைத்தபடி நடந்தவனுக்கு அந்த எண்ணத்தின் தொடர்ச்சியாக பிளாட்பாரம் இன்ஸ்பெக்டர் மணியின் நினைவு வந்தது. பாலங்களிலும், ரயில் பெட்டிகளிலும், அனாதைகளாகப் போடப்பட்ட குழந்தைகளைக் கண்டெடுத்து, பாலூட்டி, சீராட்டி, பல பெரிய வீடுகளுக்கு தத்துக் குழந்தைகளாகக் கொடுத்தவர். நிர்க்கதியாக விடப்பட்ட பெண்களை, ரயில்வே சிற்றுண்டி விடுதிகளிலும், அவரவர் பெற்றோர்களிடமும் சகோதரத் துவத்தோடு சேர்த்தவர். இப்போது பெரியவர்களாகிப் போன அப்போதைய குழந்தைகளும், நல்வாழ்வு கண்ட பெண்களும், அவரை, அடிக்கடி தரிசித்துவிட்டுப் போனார்கள். அவரிடமே குழந்தையைக் கொண்டு போகலாம். ஆனால் கொடுக்கப்படாது. நானே வச்சுக்குவேன்:

ரயில் நிலையத்திற்குள் குழந்தையோடு நுழைந்த இவனை, ரயில் போலீஸார் வழிமறித்து ஏதோ கேட்கப் போனார்கள். பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டு, அந்தக் குழந்தையைக் கொண்டு வருவதற்காக காரணத்தையும் யூகித்துக் கொண்டு, "மணி இருக்கார். சீக்கிரமாய் போ” என்றார்கள்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நான்காவது பிளாட்பாரம் முடியும் முகப்பில் இருந்த கட்டிடத்தில், முதலறையில் பிளாட் பாரம் இன்ஸ்பெக்டர் மணியை போலீஸ் சுற்றி வளைத்திருந்தது. போலீஸ் வட்டத்தில் மையமாக இருந்த மணிக்கு முன்னால், வயிறு சரிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும், டவாலி போட்ட ஒரு மனிதரும், நின்றார்கள். அந்தப் பெண், "எவ்வளவு நாளாய்யா. இந்த வியாபாரம் செய்யுறே." என்று அதட்டினாள். அந்த அறையின் மூலையில் ஒரு தம்பதியர். இந்தச் சமயத்தில் அங்கே போன ரயில் பயலை சிவப்புத் தொப்பிக்காரர் ஒருவர் பிடித்துக் கொண்டார். பிடித்த பிடியை விடாமலே எல்ல்ோருக்கும் கேட்கும்படியாய்க் கத்தினான். "இந்தப் பயல்தான் அந்த ஆசாமிக்கு ஏஜண்டு போலுக்கு. குழந்தையைத் திருடி இவன்கிட்டே கொடுக்க வந்திருக்கான் பார். ராஸ்கல். இவங்க ரெண்டு பேருக்கும் ஏழு வருஷம் வாங்கிக் கொடுக்கேன் பார்."