பக்கம்:நிழல் முகங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ

தமிழகத்தின் தலைநகரில் இருந்து, மக்களை "வடக்கிருக்க அனுப்பும் அந்த சென்ட்ரல் ரயில் வளாகம் முழுவதும் ஒப்பாரி போடுவது போலிருந்தது.

வெள்ளைக்காரன் கட்டிய கம்பீரமான அந்த ரயில் கட்டிடத்தின் உச்சியில் உள்ள கோபுரக் கடிகாரம் வேலை நிறுத்தம் செய்து கொண்டு இருந்தது. ஒரு மணியில், ஒரே மணியாக நின்றது அதன் முட்கள். அங்கேயும் இங்கேயும் அசையாமல், முக்தி பெற்று முழுமை பெற்றது. ரயில் நிலையத்திற்கு வெளியே வாடகைக் கார் டிரைவர்களின் கோபச் சத்தம். ஆட்டோக்களின் அலறல் சத்தம், காவல் துறையினரின் விசில் சத்தம்; பயணிகளுக்கும், போர்ட்டர் களுக்கும் இடையே சண்டைச் சத்தம். உள்ளேயே இதற்குப் போட்டியாக, தொலைக்காட்சிப் பெண்ணின் தொல்லைச் சத்தங்கள். எவருக்குமே புரியாத அறிவிப்புச் சத்தங்கள். சின்னச் சின்ன வண்டிகளின் சக்கர சத்தங்கள். ஆக எங்கும், எதிலும் சத்தம். சத்தமான சத்தம். அந்த ரயில் நிலையமே கோபுர வாய் வழியாகக் கூக்குரலிடுவது மாதிரியான சத்தம்.

இந்த சப்தா சப்தங்களையும் மீறி, அந்த நடுத்தர வயதுப்பெண், பிளாட்பாரம் இன்ஸ்பெக்டர் மணியை நோக்கி, ஆட்காட்டி விரல் ஆட்டிக் கொண்டிருந்தாள். பிறகு, தான் பேசுவது தனக்கே கேட்கவில்லை என்பதுபோல் அந்த அறையின் கதவைச் சாத்தப் போனாள். அவமானப்பட்டதுபோல், குனிந்திருந்த பிளாட்பாரம் இன்ஸ்பெக்டர் மணி சுதாரித்தார். "இது என்னோட அறை. எல்லோரும் வரக்கூடிய பப்ளிக் அறை. அதை மூடப்படாது" என்று கண்டிப்புடன் சொல்லி எழுந்தார். சாத்தப்போன கதவை, இழுத்துப் பிடித்தார். உடனே, அந்தப் பெண் அந்த அறையின் ஒரு மூலையில், கைக் குழந்தையுடன் இருந்த பெண்ணையும், அவளுடன் ஜோடி சேர்ந்து நின்ற ஆணையும் தன் பக்கம் கூப்பிட, இதற்குள், காவல்துறை அதிகாரி, ரயில் பயலை குழந்தையோடு சேர்த்து உள்ளே தள்ளினார். அந்தக் குழந்தை விழுந்தாலும் பரவாயில்லை என்பதுபோல, அதன் உயிரைவிட உடம்புதான் முக்கியம் என்பது போல மணி கீழே விழப்போன ரயில் பயலைத் தாங்கிப் பிடித்த படியே, எல்லோரையும் கோப்மாக முறைத்தபோது, ஆள்காட்டி விரல்காரி அட்டகாசமாய்க் கேட்டாள்.

לג

"எவ்வளவு நாளாய்... இப்படிக் குழந்தைகளை விற்று பொழைப்பு நடத்துlங்க? இந்தாம்மா. உங்களைத்தான். எவ்வளவு