பக்கம்:நிழல் முகங்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சு. சமுத்திரம்

பணம் கொடுத்தீங்க. என்கிட்டே மறைக்க முடியாது. இந்த விஷயத்துல எனக்கு இருபது வருஷம் சர்டவீஸாக்கும்."

சோர்வோடு தென்பட்ட மணியும் இப்போது துள்ளிக் குதித்தார். நல்ல கிறிஸ்தவ பாதிரியார்போல், பழுத்த மெளல்வி போல், ஆன்றடங்கிய அடிகள்போல், எந்த சலனத்தையும் காட்டாத அவர் முகம், இப்போது அக்கினிச் சட்டியானது. பதிலளிப்பது போல், பதிலடி கொடுத்தார்.

“விவரம் தெரியும் முன்னாலயே குற்றத்தைச் சுமத்துவதும், சும்மா கத்துவதும் பெண்மையாகாதும்மா. நான் குற்றவாளி என்கிற தோரணையில் கேள்வி கேட்கிறதாய் இருந்தால் உங்களுக்கு நான் பதில் சொல்லப் போறதில்லை. இப்படிக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமையில்லை."

"எனக்கு இருக்கு மிஸ்டர் இருக்கு. உரிமை இருக்கு. நான் தமிழக அரசின் சமூக நலத்துறையின் உயர் அதிகாரி நீங்க குழந்தைகளைக் கடத்தி விற்கிறதாய் டெலிபோன்ல செய்தி வந்தது. அதனாலதான் ஓடி வந்தேன். ரயில்வே போலீசும், ரயில் நிலைய போலீசும் உங்களுக்கு உடந்தையாய் இருக்குமுன்னு சந்தேகப் பட்டுத்தான் ஐ.ஜி.கிட்டே டெலிபோன் செய்து தனிக்காவல் படையை கொண்டு வந்திருக்கேன். நீங்களாய் சொல்லாவிட்டால் இவங்களாய் கேட்பாங்க... காவல்துறை கேட்கிற விதம் தெரியுமில்ல."

கூட்டத்தைப் பார்த்துவிட்டு, அந்தப் பக்கமாக வந்த நான்கைந்து ரயில்வே போலீஸ்காரர்களுக்கு, அந்தம்மா மிரட்டுவது அதிகப்படியாகத் தெரிந்தது. ரயில்வே காவல் துறையை கிள்ளுக் கீரையாய் பேசுறாளே. விடப்படாது. ஒருவர் நட்சத்திர முத்திரை போட்ட ரயில்வே காக்கிச் சட்டைக்காரர் கத்தினார்.

"இந்தா பாருங்கம்மா. இது எங்களோட ஏரியா. எங்கள் அனுமதியில்லாமல், நீங்க இவர்கிட்டே பேசுறது தப்புன்னா. அவரை விரட்டுறது பெரிய தப்பு. நீங்க யாராக இருந்தாலும் சரி. ஒங்களைக் கைது செய்ய அதிக நேரமாகாது."

அந்த அதிகாரிப் பெண்ணோடு வந்த, தமிழக அரசின் காவல்துறை அதிகாரி சவாலிட்டார்.

"யோவ். ரயில்வே இன்ஸ்பெக்டர் ஒன்னால. அந்தம்மாவை கைது செய்ய முடியுமா..? யார்கிட்டே. பேசுறோமுன்னு யோசித்துப் பேசு."