பக்கம்:நிழல் முகங்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 139

"அதைத்தான் நானும் சொல்றேன். டி.எஸ்.பி. ஸார். இது எங்களோட அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதி. எங்களால ஒங்களைக்கூட கைது செய்ய முடியும்."

"கைது செய்து பார்க்கிறியா..?"

"நீங்க மணியைக் கைது செய்து பாருங்க. பார்க்கலாம். யோவ். நம்ம ஆட்களை துப்பாக்கிகளோட கூட்டி வாய்யா."

அங்கிருந்த தமிழக அரசின் காவல்துறை அணியினர், துப்பாக்கிகளைத் தூக்கிப் பிடித்தார்கள். லத்திக் கம்புகளை நீட்டிப் பார்த்தார்கள். தங்களது அதிகாரிக்கு சவாலிட்ட ரயில்வே இன்ஸ்பெக்டரை நோக்கி நகரப் போனார்கள். அவரை, ஒருவேளை அடித்திருப்பார்கள். அதற்குள், வளைந்த தொப்பிகள் போட்ட ரயில்வே போலீஸ்காரர்கள் அங்கு திமுதிமுவெனக்கூடி, சிவப்புத் தொப்பிக்காரன்களை முறைத்தார்கள். ரயில் நிலையத்தில் குழந்தைகள் திருடப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறதா என்ற விவகாரம், இப்போது மத்திய அரசின் ரயில்வே போலீஸ் பெரிதா? அல்லது மாநில அரசின் காவல்படை பெரிதா? என்று கெளரவப் பிரச்சினையாகி, பலப்பரிட்சையாகிவிடுமோ என்று பலரை பயமெடுக்கச் செய்தது.

ஆனால், ரயில்பயல் மட்டும் சிரித்தான். வழக்கமாகச் சிரிப்பானே ஊளைச் சிரிப்பு அந்த மாதிரியான சிரிப்பு. அந்த அதிகாரிப் பெண்ணும் சற்று பயந்து விட்டாள். “விற்பனைக்குரிய குழந்தைகளை மீட்டு, பதவி உயர்வு பெறலாம் என்று நினைத்தாள். இருக்கிற பதவியே இறங்கிவிடுவதுபோல் ஆகிவிட்டதை உணர்ந்து, மாநிலக் காவல் வீரர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு, சமாதானப்படுத்தினாள். மணியும், தன் பங்குக்கு ரயில் போலீஸை அமைதிப்படுத்திவிட்டு, அந்தப் பெண்ணிடம் அமைதியாகச் சொன்னார்.

"உங்களுக்கு இருபது வருஷம் பதவியனுபவம் இருக்கிறதாய் சொல்றீங்க. நாலு வருடத்திற்கு முன்னால நானே உங்களுக்கு லட்டர் எழுதியிருக்கேன். இந்த ரயில் நிலையத்திற்குள் பல அனாதைக் குழந்தைங்க விழுது வந்து எடுத்துட்டுப் போங்கன்னு நானே எழுதினேன். பதிவில்ல. ஒருவேளை. கேவலம் ஒரு பிளாட்பாரம் இன்ஸ்பெக்டருக்குப் பதில் போடப்படாதுன்னு, நீங்க நினைக்கலாமுன்னு எங்க நிலையத் தலைவர் கனகசபாபதி அய்யாவை வைத்து லட்டர் எழுதுனோம். அதுக்கும் பதிலில்ல. அப்புறம் நானே நேரில் உங்களைப் பார்க்க வந்தேன். அரைமணி நேரம் காக்க வச்சுட்டு, என்னைக் கூப்பிட்டிங்க. நான் பேசும்போது,