பக்கம்:நிழல் முகங்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - சு. சமுத்திரம்

டெலிபோனைச் சுழற்றியபடியே கேட்டிங்க. அப்புறம் நான் அனாதைக் குழந்தைகளைப் பற்றி எடுத்துரைத்தேன். நீங்க என்னடான்னா அப்போவும் என்னை அனாதை மாதிரியே பார்த்தீங்க. "பார்க்கிறேன்" என்று ஒரு வார்த்தையில் என்னைப் பார்க்காமல் சுவரைப் பார்த்தபடியே பதிலளித்திங்க. இப்போ என்னடான்னா..”

"இந்தா பாருங்க மிஸ்டர். ஒங்களைப் பார்த்த ஞாபகம் இல்ல. நீங்க குழந்தைகளை விற்கலன்னு பொய் சொல்றது மாதிரி, என்னைப் பார்த்ததாயும் பொய் சொல்lங்க"

"நீங்கததான் ரெட்டைப் புளுகாய்ப் புளுகிறீங்க. எங்க லட்டரை பெற்றதிற்கான உங்க அத்தாட்சி கையெழுத்தைக் காட்டட்டுமா."

"காட்டுங்க பார்க்கலாம்."

"இதோ" "இது என் கையெழுத்தில்ல."

"யார் கையெழுத்தோ. உங்க இலாகாவோட முத்திரைக்கு மேலே உள்ள கையெழுத்து."

"இதுக்குல்லாம் நான் பொறுப்பில்ல."

"இப்போதான் புரியுது. ஒரு இலாகாவுக்கு அனுப்புற பதிவுத் தபால் ரசீதுல ஏன் கிளார்க்குகள் கையெழுத்து போடுறாங்கன்னு. உங்க இலாகா, அலுவலர் உங்க சார்பில கொடுத்த கையெழுத்துக்கு பொறுப்பு வகிக்கிற யோக்கியதை இல்லாத உங்களுக்கு அனாதைக் குழந்தைகளைப் பற்றிக் கேட்கிறதுக்கு என்ன யோக்கியதை இருக்குது?"

"மிஸ்டர்."

"அட சரிதான் மேடம். எந்த நிசமான சமூகத் தொண்டனும், பழி பாவத்துக்குப் பயப்படுவான். ஆனால், அந்தப் பழிபாவம் சுமத்தப்பட்டால் அந்தச் சுமையைத் தூக்கப் பயப்படமாட்டான். புரிஞ்சுக்கங்க."

"சரி. நீங்க குற்றவாளி இல்லன்னு நிரூபிச்சுக் காட்டுங்க?"

"குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதியாகக் கருதப்படவேண்டும் என்பது சட்டம்"

"நானும் சட்டம் படித்தவள்தான். அதோ அந்த அம்மாகிட்டே இருக்கிற குழந்தையும் ஒங்க குற்றங்களுக்கு ஒரு சாட்சி. தமிழக அரசின் சார்பில் நான் சொல்றேன். நீங்க குழந்தைகளை திருடி விற்பவர். என்ன சொல்றீங்க?"