பக்கம்:நிழல் முகங்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 141

மணியின் உடம்புக்குள்ளே, அக்கினி மூண்டது. ஒரு காலத்தில் பார்வதி, தன்னை எரித்துக் கொள்ள தன் உடம்புக்குள்ளேயே, யோக சக்தியால் நெருப்பு மூட்டினாளாமே. அப்படிப்பட்ட நெருப்பு. அது யோக சக்தி நெருப்பென்றால். இது சேவா சக்தி நெருப்பு. மணி, ஒரு பீரோவைத் திறந்தார். அதிலிருந்த, நான்கைந்து கோப்புகளை எடுத்தார். ஒவ்வொன்றாக விரித்துக் காட்டியபடி, ஆக்ரோசமாகப் பேசினார்.

"ஓங்களுக்கு கண்ணிருந்தால் நல்லா பாருங்கம்மா. இதோ இது, மைசூரில் உள்ள துர்க்கா எழுதுன கடிதம். எப்படி அப்பான்னு எழுதியிருக்காள் என்று பாருங்க! இந்தப் பெண், கூட்ட நெரிசலில் சிக்கி, இந்த ரயில் நிலையத்தில் அனாதையாய் நின்ற போது, அந்தக் குழந்தையை பத்து வருஷத்துக்கு முன்னாடி. வீட்ல ரெண்டு நாள் தங்க வச்சு. அதோட அப்பாவை வரவழைச்சு ஒப்படைத்தேன். இதோ போட்டோவில தெரியுறானே. இந்த ரெண்டு வயது அனாதைப் பயலை நானே எடுத்து வளர்த்தேன். இப்போ எங்க கேன்டீன்ல பதினாறு வயது பையனாய் வேலை பார்க்கான். இது மாரியம்மா என்கிற பெண்ணோட தந்தை எழுதின கடிதம். சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டு ஒருத்தனை நம்பி, சென்னைக்கு வந்த பெண்ணை, காப்பாற்றி அவளை பத்திரமாய் வீட்டுக்கு அனுப்புனதற்காக தொடர்ந்து வருகிற லட்டர். இந்தப் பைல். எனக்கு, என் மேலதிகாரிகள் கொடுத்த பாராட்டுக் கடிதங்கள். எனக்கு வருகிற நன்றிக் கடிதங்களுக்கு பதில் எழுதுதணுமுன்னு நினைத்தால் என் மாதச் சம்பளமே பத்தாது. பால் கொடுக்கிற மாட்டைப் பல்லைப் பிடித்து பார்க்கப் படாதும்மா."

"இருக்கலாம். ஆனால் எதுக்கும் புராப்பர் புரசீஸர், அதுதான் முறைன்னு இருக்குதே முதல்ல. எங்களுக்கு தபால் அனுப்பணும்."

“என்னம்மா. முறை. ஒங்களுக்கு தகவல் அனுப்பி நீங்க வாரதுக்குள்ளே குழந்தைகளுக்கு "முறை' வச்சுட வேண்டியதுதான். அதாவது கிராமத்துல செத்துப் போனவருக்காக எல்லோரும் கூட்டாய் அழுகிறதுக்குப் பெயர்தான் முறை. இந்த இழவு முறைதான் உங்கமுறை."

"நீங்க வரம்பு மீறி பேசுறீங்க மிஸ்டர்."

"பின்ன என்னம்மா. சட்டத்தின் எழுத்தைவிட. அதன் உணர்வுதான் முக்கியம். என்னோட செயலுக்கு, அதன் நோக்கத்தை பார்க்கணும். அப்படியும், ஒவ்வொரு குழந்தை கிடைத்ததும், அந்த விபரத்தை, ரயில் நிலைய போலீஸ்ல எழுத்து மூலம் தகவல் கொடுத்திருக்கோம். குழந்தையை தத்து எடுத்தவங்ககிட்டே, உறுதிமொழி வாங்கியிருக்கோம். இதுவரைக்கும் முப்பது