பக்கம்:நிழல் முகங்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சு. சமுத்திரம்

குழந்தைகளை மீட்டு, அதுங்களை நல்ல இடத்துல சேர்த்து இருக்கேன்"

"ஓ மை காட். முப்பது குற்றங்கள்."

"சரி. குற்றந்தான். குற்றவாளிதான். என்ன செய்யப் போlங்க..? என்ன செய்யனுமோ செய்துக்கங்கம்மா."

மணி திறந்து வைத்த கோப்புகள், மின் விசிறியால் மிரண்டு, சத்தம் எழுப்பின. எவேரா ஒரு உதவியாள், அவற்றை மூடினார். மணி வீறாப்பாக சுவரில் சாய்ந்தார். ஏசுநாதர் சிலுவையில் சாய்ந்தாரே. அப்படிப்பட்ட சாய்வு. இதற்குள். அங்கே ரயில்வே ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் கூடிவிட்டார்கள். ஆளுக்கு ஆள். அந்தம்மாவைப் பிடித்துக் கொண்டார்கள்.

"ஒன் மனசிலே என்னம்மா நெனச்சே.? உபகாரம் செய்ய முடியாட்டாலும் உபத்திரம் செய்யாம இருக்கலாம். அரசாம். அரசாங்கமாம். சமூகநலத்துறையாம், சமூகநலத்துறை... எத்தனையோ குழந்தைகளை எங்க மணி அய்யா வருஷக் கணக்கிலே எடுத்து வளர்த்திருக்கார். அப்பெல்லாம் எங்கே போனே. பதவி சாக்கிலே நீயே குழந்தைகளை விற்கமாட்டேன்னு என்ன நிச்சயம்.?"

விவகாரம் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகிப் போனது. மாநில அரசின் சிவப்புத் தொப்பிகளும், மத்திய அரசின் வளைந்த தொப்பிகளும், ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டன. இந்தச் சமயத்தில், ரயில் நிலைய தலைமையதிகாரி, கனகசபாபதி, அங்கே ஒடி வந்தார். அவரை பார்த்ததுமே, ஊழியர்கள் மெளனமாகி, அவர் மீது கொண்ட மரியாதையையும், அவரது உறுதியான நேர்மை யையும் புலப்படுத்தினார்கள். அவரைப் பார்த்தவுடன் மணியால், தாளமுடியவில்லை. கிட்டத்தட்ட அழப்போனார். கனகசபாபதி தனக்கு விஷயம் தெரியும் என்பதுபோல், மணின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். பின்னர், அந்தம்மாவை கூர்மையாக உற்று நோக்கினார். இன்னும் கெளரவத்தையே பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரப்பெண் அவரிடம் நேருக்கு நேராய் பேசினார்.

"போனது போகட்டும். இந்தக் குழந்தையையாவது என்கிட்டே மன்னிக்கணும். எங்க இலாகாவிடம் ஒப்படைக்கச் சொல்லுங்க. ஏப்பா. எப்படிக் கூச்சல் போடுறாங்க."

"நீங்கதான் அவங்களைக் கூச்சல் போட வச்சுட்டீங்கனுன்னு நினைக்கேன். சட்டப்படி நீங்க' என்னை வந்து பார்த்திருக்கணும். என் மூலம், அவரை அணுகியிருக்கணும். சரி போனது போகட்டும், இந்தக் குழந்தையை இந்த பெரியவங்களிடம் என் சம்மதத்துடனும்,