பக்கம்:நிழல் முகங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 143

போலீஸ் சாட்சியத்தோடுதான் மணி கொடுத்தார். இவங்க தமிழ் நாட்டுக்காரங்க. டில்லியில் பேராசிரியர், பேராசிரியையாய் வேலை பார்க்காங்க.. குழந்தை இல்லை. சொந்தத்துல குழந்தையை எடுத்து உறவைக் கெடுக்காமல், சொந்தமில்லாத குழந்தையை தத்துப் பிள்ளையாய் எடுத்து உறவு கொண்டாடத் துடிக்காங்க. இதனால உங்களுக்கு என்ன கஷ்டம்."

"காதும் காதுமாய் இருந்தால் கவலை இல்லை ஸார். இப்போ விவகாரம் பெரிசாயிட்டு ஸார்."

"நானும் உங்களை மாதிரியே சட்டப்பபடி பேசணும். என்கிறீங்களா..? பிளாட்பாரம் டிக்கெட் இல்லாமல் அத்துமீறி நுழைந்ததுக்கு நடவடிக்கை எடுக்கணும் என்கிறீங்களா..?”

"இல்ல ஸார். நானாய் இங்கே வர்ல ஸார். எங்க தலைமை அதிகாரி அனுப்பி வச்சாங்க ஸ்ார். வந்தால் குழந்தையோட வா. இல்லாட்டி வராதேன்னு சொன்னாங்க ஸார். எப்படி அவங்களுக்கு பதில் சொல்லணுமுன்னு நீங்களே சொல்லுங்க."

'ஒங்களோட அனாதை குழந்தைகள் வளர்ப்பு புள்ளி விவரத்தை கூட்டுறதுக்கு இந்தக் குழந்தை பலியாகணுமா..?"

"அப்படியில்ல ஸார். வேணுமுன்னால். இவங்களையும் என்னோட அனுப்பி வைங்க ஸார். ஒரு ரிஜிஸ்டர்ல சின்ன "என்ரி" போட்டுட்டு குழந்தையை இவங்க கிட்டேயே கொடுத்துடுறேன் ஸார். இவங்க எங்களுக்கு ஒரு உறுதிமொழி எழுதிக் கொடுக்கணும். அவ்வளவுதான். எல்லாம் அரை மணி நேரத்துல முடிஞ்சுடும் ஸார். இதுதான் ஸார் சட்டம். அதைக் காக்க வேண்டியது என்னோட கடமை ஸார்."

கனகசபாபதி சிறிது யோசித்தார். அவரது தர்ம சங்கடத்தைப் புரிந்து கொண்டவர்போல், டில்லிப் பேராசிரியர், அவரிடம் வந்தார். ஐம்பத்தைந்து வயதிருக்கும் முதிர்ச்சியான முகம். பேரமைதியான பேராசிரியத்தனம்.

"பரவாயில்லை தம்பி. எது நடந்தாலும் அது நல்லதுக்கே. இந்தம்மாவோடு நாங்கள் செல்கிறோம். அவர்கள் சொன்னது மாதிரி, எவையெல்லாம் எழுதப்படனுமோ, அவையெல்லாம் எழுதப்பட இணங்குகிறோம். மங்கை இங்கே வாம்மா."

பேராசிரியர் அருகே பேராசிரியை மங்கை வந்து நின்றார். அந்தம்மா தோளிலே ஒரு இரண்டு வயதுக் குழந்தை துகிலாகிக் கிடந்தது. அவளை விடமாட்டேன் என்பதுபோல், இரண்டு கரங்களாலும், அவள் கழுத்தில் சங்கிலிவடம் போட்டது. இருவரும்