பக்கம்:நிழல் முகங்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சு. சமுத்திரம்

புறப்படலாம் என்பதுபோல், அதிகாரியம்மாவைப் பார்த்தபோது, அந்தம்மா, வினயமாகக் கேட்டாள்.

இருந்தானே, அவனை எங்கே ஸார்.”

எல்லோரும், அந்த அறையை நோட்டம் போட்டார்கள். ரயில் பயலைக் காணவில்லை. குழந்தையோடு காணவில்லை. அந்தக் கூட்டத்தில் நின்ற அந்தோணி, பல் தெறிக்கக் கத்தினான்.

"அய்யோ. ஒரு குழந்தைக்காக எங்க குழந்தையும் போயிட்டுதே. எங்கே போனானோ..?"

4235

బోల్తో

Tெந்த ரயிலும் ஓடாமல், எல்லாமே ஆடி அடங்கிப் போனது போல் தோன்றியது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உச்சி வெயில் கிறக்கத்தில், பல பயணிகள் படுத்துக் கிடந்தார்கள். சிலர், சுவர்களில் சாய்ந்து கிடந்தார்கள். சில பிளாட் பாரங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. பல தண்டவாள ஜோடிகள் ரயில் பாரம் இல்லாமல் இடையிடையே உள்ள இணைப்பு வாய்களால் சிரித்துக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தின் வெளியோரத்தில் பிச்சைக்காரர்களும், நாடோடி களும், அடுத்த உணவுக்கு வழி தேடுபவர்கள்போல், கண்களை உருளவிட்டு, கால்களை மடித்து வைத்து, முடங்கிப் போய்க் கிடந்தார்கள்.

பிளாட்பாரம் இன்ஸ்பெக்டர் மணியின் அறையில், இப்போது அவரும் தலைமை அதிகாரி கனகசபாபதியும் தனித்திருந்தார்கள். அங்கே திரண்டிருந்த தொழிலாளர்களுக்கு அந்தக் குழந்தையை அதிகாரிப் பெண்ணிடம் கொடுக்க மனமில்லை. அதேசமயம், கனகசபாபதி அய்யா சொன்னால், அது சரியானதாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன் கலைந்து போனார்கள். அந்தோணி, ரயில் பயலைத் தேடி, எங்கேயோ போய்விட்டான். கழுத்து நாடாவைச் சரிப்படுத்திக் கொண்டிருந்த கனக சபாபதியிடம் மணி முறையிட்டார்.

'வர வர நம்ம ரயில் நிலையத்துக்துள்ளேயும், ரயில் பெட்டிகளுக்குள்ளேயும், குழந்தைகளை விட்டுட்டுப் போகிறது