பக்கம்:நிழல் முகங்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 145

அதிகமாயிட்டு ஸார். என்னாலேயும் ஒரு அளவுக்கு மேலே செய்ய முடியல ஸார். இந்த சமூக நலத்துறையாவது, ரயில் நிலையம், பேரூந்து நிலையம், மார்க்கெட்டுகள் மாதிரியான கேந்திரப் பகுதிகளில் நடமாடும் அனாதை இல்லத்து வாகனங்களை விடலாம் ஸ்ார்."

"யாருமே இதை கேட்கமாட்டாங்க. ஏன்னா இது நல்ல யோசனை."

"ஏன் எபார் ஒரு மாதிரி இருக்கீங்க...? நான் ஏதும் தப்பு செய்திட்டேனா?”

'நீ மட்டும்தான் சரியாய் செய்யுற. காய்த்த மரத்துலதான் கல்லெறி விழும். கள்ளி மரத்துல எதுவும் விழாது. உன் சமூகக் கடமையை உனக்குத் தோன்றும்படி செய். எதுக்கும் நானிருக்கேன்."

"அந்த தைரியத்துலதான் இப்படிப்பட்ட ஆபத்தான, பணியிலயும் ஈடுபடுறேன். ஸார். காபி ஏதாவது குடிக்கிறீங்களா 6xussif...?”

"வேண்டாம்பா. ஏனோ எனக்கு எது மேலயும் விருப்பமில்லே." "உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது சார்”

"இந்தத் தாய்களுக்கு சுமந்து பெற்ற குழந்தைகளை இப்படி அனாதையாய் விட்டுட்டுப் போக எப்படித்தான் மனம் வருமோ..?”

"பாவம் அவங்க கஷ்டம் அவங்களுக்கு."

"இப்படிப் பார்த்தால் கொலைகளைக்கூட நியாயப்படுத்தலாம். எந்தப் பிரச்சினைக்கும் அதுக்குள்ளேயே தீர்வு இருக்கு. இவள்கள் நினைத்தால் நிச்சயம் தங்கள் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றமுடியும். ஆனாலும் இவள்களுக்கு குழந்தை ஒரு பை புராடக்ட். அதாவது ஒரு உப பொருள். ஏதோ ஒரு இனச் சேர்க்கையில் ஏற்பட்ட ஒரு ரசாயன விளைவு. அந்த விளைவை. இவள்கள் குழந்தையாகப் பார்ப்பதில்லை. கொடுமையின் சின்னமாகவே நினைக்கிறார்கள். குஞ்சுகளோடு நிற்கிற கோழிகூட தன்னையே கெளவிப் பிடிக்கக்கூடிய பூனையை நோக்கி கொத்துறதுக்கு பாயும். குட்டியோட நிற்கிற ஆடுகூட தன்னைவிட வலுவான நாயை நோக்கி கொம்பை உயர்த்தும். ஆனால் இவர்களோ தங்களோட சுயலாபத்துக்காக பெத்த குழந்தையைக் கூட குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள். நல்லவேளை. அந்தக் குழந்தைகளைக் கொல்லாமல் போடுகிறாள்களே. அதுக்காக பாராட்டனும்."