பக்கம்:நிழல் முகங்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சு. சமுத்திரம்

கனகசபாபதி வெறுப்போடு சிரித்தார். மீண்டும் சோகமாகத் தொடர்ந்தார்.

"ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ முக்கியமான தேவை தன்னைத்தானே இனப்படுத்திக் கொள்வதுதான். என் தந்தை. என் அம்மா.. என் மகன். என் தம்பி. என் தங்கை என்ற உறவோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு. அடையாளப் படுத்திக் கொள்வதுதான் மனித இனத்தின் அடிப்படை ஆதாரம். இந்த ஆதாரமற்ற அனாதைகளை நினைக்கும் போதெல்லாம் அவகளுக்கு அவர்களை அடையாளப் படுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற எண்ணம் வரும் போதெல்லாம், நான் சிறுமைப்படுறேன். அனாதை போல துடிக்கிறேன். மானுடமே அனாதையானதுபோல் அழவேண்டும் போல் தோணுது. ஆகையினாலே. நீ செய்கிற தொண்டு மனிதநேயத் தொண்டு. தொடர்ந்து நடத்து. நான் வாறேம்பா. நம்ம ரயில் பயல் கிடைக்காவிட்டால், எங்கிட்டே சொல்லு. நானும் லைன்ல சொல்றேன். அவன்கிட்டே இருந்த குழந்தை யாருடையது?"

“எனக்கே தெரியாது ஸார். நீங்க சொன்னது மாதிரி மானுடத்தின் கழிசடை ஒருத்தி எங்கேயாவது அந்தக் குழந்தையை விட்டெறிந்திருப்பாள்."

"சரி. இப்போ அனுப்பி வைத்திருக்கிற குழந்தையோட முடிவு தெரியுமுன்னால் ரயில் பயல் குழந்தையை சமூக நலத்துறையில் கொடுத்துடாதே. என்ன ஆனாலும் சரி."

"சரிங்க அய்யா."

"இறைவன் மகன் ஏசு, சிலுவை சுமக்கப் பிறந்தார். ஆனால், நீ குழந்தை சுமக்கப் பிறந்தாய். மறந்துடாதே மணி."

கனகசபாபதி, போய்விட்டார். சிடுசிடுப்பு இல்லாமலே நியாயமாக இருக்க முடியும். கோபப்படாமலே கண்டிப்புடன் இருக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக விளம்பரம் தேடாமலே மனிதாபிமானியா இருக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் தனது தலைமை அதிகாரியை, மணி, கண்கொட்டாமல் பார்த்தார். அவர் பேசிய பேச்சை நினைவுபடுத்தி, தனக்குள்ளேயே பேசிப் பார்த்தார். மனிதநேய வேர்களை மனதுக் குள்ளேயே புதுப்பித்துக் கொண்டார். கடந்த ஒரு மணி நேரமாக ஏற்பட்ட வாதச் சுமை. தூக்கச் சுமையாகி, அவரை முன்னால் இருந்த மேஜையில் குப்புறப் போட்டது.

மணி, மணிக்கணக்கில் தூங்கிக் கொண்டிருந்தார். வெண்புறா ஒன்று மனித வடிவுடன் கைகளென்ற இறக்கைகளோடு துயில்