பக்கம்:நிழல் முகங்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 147

கொள்வதுபோல், அவர் வெள்ளைச் சீருடையில் அந்த மேஜை முழுவதும் வியாபித்துக் கிடந்தார். உதவியாளர்களுக்கும் அவரை உபத்திரவப்படுத்த மனம் வரவில்லை. என்றாலும் "அய்யா. அய்யா." என்ற குரலையும், ஊளைச் சத்தத்தையும் கேட்டு அவர் கண் விழித்தார். தலையை மேஜையில் இருந்து எடுக்காமலே சத்தம் கொடுத்தவர்களைப் பார்த்தார். அந்தோணி. அவரருகே ரயில் பயல். அவன் இடுப்பில் அந்தக் குழந்தை. அதன் வாயில் ஒரு பிஸ்கட். அதன் சிதறல்கள் அப்பிய கன்னம். அது இங்கா இங்கா என்று அழுதபடியே அந்த பிஸ்கட்டை பசிப்பிணிக்கு மருந்துபோல சாப்பிட்டது. சுவைத்துச் சாப்பிடவில்லை. அம்மா அகப்படுவாளா என்று அக்கம் பக்கம் பார்த்தபடியே அழுதபடியே தின்றது.

மணி, முகத்தைத் துடைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் ரயில் பயலைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியபடியே கேட்டார்.

"இதுக்குப் பேர்தாண்டா விதி என்கிறது. ஆறு வயதிலேயே, நீயே என்கிட்டே அனாதையாக வந்தே. நான்தான் உன்னை சுந்தரண்ணன்கிட்டே ஒப்படைத்தேன். இப்போ என்னடான்னால் நீயே ஒரு அனாதைக் குழந்தையை எடுத்துட்டு வந்திருக்கே.. இதுக்காக அழுகிறதா, சிரிக்கிறதா. ஆமாடா. எங்கே போனே. எப்படி வந்தே. இந்தக் குழந்தை எப்படிச் கிடச்சுது?"

ரயில் பயல், கைகால்களை ஆட்டி, அரைகுறையாகப் பேசப் போனபோது, அந்தோணி ஒரு பக்கமாய் அந்தப் பயலின் உதடுகளைச் சேர்த்து பிடித்துக்கொண்டே பேசினான்.

"ஒங்களுக்கும் அந்த அம்மாவுக்கும் வாதம் சூடு பிடிச்சு. நம்ம போலீஸும் அவங்க போலீஸும் மோதப்போனபோது. பய்ல் நழுவியிருக்கான். இங்கே இருந்தால் அகப்பட்டு மாட்டிப் போமோன்னு பயந்து, பயல் எழும்பூர் ரயில் நிலையத்துல ஒரு ரயிலுக்குள்ளே ஒழிஞ்சு இருந்திருக்கான். நம்ம கனகசபாபதி அய்யாதான் அங்கேயும் இங்கேயும் இவனைத்தேடி அலைந்த என்கிட்டே சொன்னாரு எழும்பூர் நிலையத்துக்கு டெலிபோன்ல கேட்டாராம். அவங்க தேடுனதுல இந்தப் பயல் அகப்பட்டான். அய்யா என்கிட்டே சொன்னாரு. நான் ஒடிப்போய். இந்தப் பயலை. இழுத்துட்டு வந்தேன். தன்னையே காப்பாத்திக்க முடியாத பயல். குழந்தையை காப்பாத்துவானாம். படுவாப் பயல். இப்போ மட்டும் நான் பிடிக்கல்ேன்னா மதுரைக்கோ, மானாமதுரைக்கோ போகிற ரயிலுல ஏறி போயிட்டிருப்பான். அப்புறம் இவனை கண்டு பிடித்திருக்கவே முடியாது. ஏண்டா மாங்கா மடையா. பெரிய மனுஷனாய் ஆயிட்டே என்னே. ஒரு குழந்தையை காப்பாத்துறதாய் நினைச்சு அப்பாக்களை மறந்துட்டே என்னே. பாருங்கய்யா.