பக்கம்:நிழல் முகங்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சு. சமுத்திரம்

அந்தப் பய மகனும், இந்தப் பயல்கிட்டே எப்படி ஒட்டுறான் பாரேன். ஒரு தாய் பிள்ளை மாதிரி."

ரயில்பயல், மெய் சிலிர்த்து நின்றான். இந்தக் குழந்தை நிசமாவே என் தம்பிதானோ. இவனைப் பெற்றவள்தான் என்னையும் பெற்றிருப்பாளோ ... அப்படி ன்னா... நான் அனாதையில்லே. நானும் இந்தத் தம்பியும் அம்மாவோட சேர்ந்து வாழ்கிற காலம் வருமோ. சீ. எவள் அம்மா. இவளுக்கு மகனாய் இருக்கிறதைவிட ஒரு பன்றிக்குக் குட்டியாய் இருக்கலாம். அம்மா வயத்தில், பிறக்காமலே பிறந்த பிள்ளை. அப்படின்னா. ஆறு வயதுல அம்மாவோட மாநிற முகத்தைப் பார்த்தது பொய்யா. அவளோட கையைப் பிடித்தபடி நடந்தது பொய்யா. வேணு முன்னே விட்டாளோ. வழி தெரியாமல் போயிட்டேனோ.

அந்தப் பயலிடம் குழந்தை எங்கே கிடைத்தது. என்று கேட்கப்போன பிளாட்பார இன்ஸ்பெக்டர் மணி. "அடடே வாங்கய்யா. வாங்கம்மா என்ன வெறுங்கையோட வாரிங்க" என்று பரபரப்பாய் பேசியபடியே எழுந்தார். டில்லிப் பேராசிரியரும், பேராசிரியையும் சோர்வாக, எதிர் நாற்காலியில் உட்கார்ந்தார்கள். அந்தம்மா சோகத்தை சாய்ப்பவள்போல் நாற்காலியின் பின் சட்டத்தில் சாய்ந்தாள். பேராசிரியர் அலுப்புத்தட்ட அந்தப் பெண் அதிகாரியிடம் ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துரைத்தார்.

"அதை ஏன் கேட்கிறீர்கள் தம்பி. அந்தம்மா குழந்தைகள் சட்டத்திற்கு காப்பதிகாரி என்று நினைத்தேன். கடைசியில் அவள் சிறுபிள்ளைத்தனமானவள் என்பதும், அந்தச் சட்டம் குழந்தைகள் சட்டமில்லை. குழந்தைத்தனமான சட்டம் என்பதும் புரிந்தது. எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறாள். நீங்கள் இந்தக் குழந்தையை விற்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? உங்களுக்கு குழந்தை பிறந்து இந்தக் குழந்தையை வேலைக்காரக் குழந்தையாக வைக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? மேடைப் பரிசோதகர் மணிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? எவ்வளவு காலமாய் தொடர்பு? இதற்கு முன்பு குழந்தைகளை வாங்கினிங்களா.. எப்படி வாங்கினiர்கள். எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினர்கள். அசல் அடங்காப் பிடாரி, அசல் அடங்காப் பிடாரி"

"அப்புறம்." "அப்புறம் என்ன. அப்புறம். நான் டில்லிக்குப் போய் விண்ணப்பிக்க வேண்டுமாம். எங்கள் துணைவேந்தர் அந்தக்

கடிதத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமாம். கடிதத்துடன் சொத்துப் பத்திர நகல்கள், வங்கி இருப்பு. ஆகியவற்றின் நகல்களை