பக்கம்:நிழல் முகங்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 149

இணைத்து அனுப்ப வேண்டுமாம். அடேயப்பா. நான் முனைவர் பட்டத்துக்கு எழுதும்போதுகூட, இப்படிப்பட்ட கேள்விகளைச் சந்திக்கவில்லை."

பேராசிரியர் பேசி முடித்ததும், பேராசிரியை, நாற்காலியின் முனைக்கு தன்னை நகர்த்தியபடியே பேசினாள். ஐம்பது வயதிருக்கும், களை சொட்டும் முகம். எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தெரியாதது போன்ற குரல். 'பாவங்களைக் காட்டாமல், பகிரங்கமாகக் பேசும் சுபாவம். பிறர் பேசும்போது. லேசாய் தலையை ஆட்டும் தோரணை.

"அந்தம்மா கேட்டது, கேள்விகள் அல்ல தம்பி. கேலிகள். இவ்வளவுக்கும் அந்த கருணை இல்லம் அந்தப் பெயருக்கு எதிர் மாறாய் இருக்கிறது. அங்குள்ள ஒவ்வொரு குழந்தையையும் இந்தம்மா பார்த்த பார்வை, பேசிய பேச்சு. ஆண்டவா. இந்தக் கொலை இல்லங்களில் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுப்பா."

"எப்படியோ தம்பி. என் மனைவியின் ஆசையால்தான் இப்படி தத்துப் பிள்ளைக்காக தமிழகம் வந்தேன். ஆரம்பமே சரியில்லை. எனக்கு அந்தம்மா. அந்தக் குழந்தையைத் தருவாள் என்கிற நம்பிக்கை இல்லை. இனிமேலும் வழக்கம்போல் இந்தம்மாவுக்கு நான் குழந்தை... எனக்கு இந்தம்மா குழந்தை. விடை கொடுக்கிறீர்களா தம்பி. முப்பதாண்டு காலமாக டில்லியில் வாழும் எங்களுக்கு இங்கே எல்லாமே புதிராக தோன்றுகிறது தோழரே. விடை கொடுக்கிறீர்களா?"

மணி, அந்த பேராசிரியத் தம்பதிக்கு விடை கொடுக்காமல், அவர்களது பிரச்சினைக்கு விடை இருப்பதுபோல் பூடகமாகப் பேசினார். அவரும் இப்போது செந்தமிழில் பேசினார்.

"உங்களுக்கு அந்தக் குழந்தைதான் வேண்டுமா..? இல்லை. எந்தக் குழந்தை என்றாலும் போதுமா?"

"மனிதர்களிடையே இன, மத வேறுபாடுகள் இருக்கலாகாது என்று மேடைகளில் பேசும் நாங்களா குழந்தைகளிடம் வேறுபாடு காண்போம்? எந்தக் குழந்தையும் சம்மதமே. சரி. இனிமேல் அதைப் பற்றிப் பேசி என்ன பயன்."

மணி, ரயில் பயல் இடுப்பில் இருக்கிற குழந்தையை உற்றுப் பார்த்தார். அந்த பயல், அந்த சின்ன ஜீவனுக்கு பெரிய பெரிய முத்தங்களாகப் பதித்துக் கொண்டிருந்தான். மணி, அந்தப் பயலை உரிமையான அதட்டலோடு கேட்டார்.

"டேய். குழந்தையை அவங்ககிட்டே கொடுடா."

rち、11