பக்கம்:நிழல் முகங்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 க. சமுத்திரம்

ரயில் பயல், அந்த வார்த்தையை எதிர்பாராதுபோல், மோவாயை உயர்த்தி, தான் திடுக்கிட்டதைக் காட்டினான். பிறகு, அதை மீண்டும் கேட்க விரும்பாதவன்போல், முகத்தைத் திருப்பினான். குழந்தையை இடுக்கி அணைத்தான். அது அழும்படி, அமுக்கிப் பிடித்தான். மணி, "ஒன்னைத்தாண்டா. குழந்தையைக் கொடுடா.." என்றார் மீண்டும்.

ரயில் பயல், குழந்தையோடு வெளியே ஒடப்போனான். அத்தோணி. அவனைப் பிடித்துக் கொண்டான். திமிறியடித்த பயலை, கக்கத்திற்குள் வைத்துக் கொண்டான். அந்தப் பயலோ குழந்தையைக் கொடுக்கப் போவதில்லை என்பதுபோல், தலையை ஆட்டினான். அந்தோணியின் பிடியில் இருந்து, விடுபட்டு, மணியை நேருக்கு நேராய் பார்த்து, தலையை பக்கவாட்டில் ஆட்டினான். அந்தோணி அவனைச் சாடினான்.

"மூளை கெட்ட முண்டம். குழந்தையை ஏண்டா. கொடுக்க மாட்டேங்கிறே. இதை வைத்து ஒன்னால காப்பாத்த முடியுமா..?”

முடியும் என்பதுபோல், அந்தப் பயல் மணியின் முன்னால் நெருங்கி நின்றான். வலது கையை, வெளியே சுட்டிக்காட்டி, பிறகு வாயருகே கொண்டு போனான். உரல் ஆட்டுவதுபோல் வலது கையைச் சுற்றினான். பிறகு மணியைக் கையெடுத்துக் கும்பிட்டான். குழந்தையை கெட்டியாக பிடித்துக் கொண்டான். மணிக்கு, அவன் என்ன சொல்கிறான் என்பது புரிந்தது. அது புரியாத அந்தோணிக்கு விளக்கினார்.

"போன மாதம் இவனுக்கு நம் சிற்றுண்டி விடுதியில் வேலை போட்டுக் கொடுக்கிறதாய் சொன்னேன். அப்போ பயல் வேண்டான்னுட்டான். காலமெல்லாம் ரயிலுலயே "அப்"களோட பிரயாணம் செய்யப் போவதாய் சைகை செய்தான். இப்போ என்னடான்னா வேலையில் சேரத் தயாராம். அதுல கிடைக்கிற வருமானத்துல இந்தக் குழந்தையைக் காப்பாற்றுவானாம்."

அந்தோணி, அந்தச் சின்னஞ் சிறு பயலை, ஆச்சரியமாகப் பார்த்தான். அன்போடு பார்த்தான். ஆனாலும், கத்தினான்.

"ஒனக்கு மூளை இருக்காடா. முண்டம்! இந்தப் பெரியவங்க கிட்டே இந்தக் குழந்தை போனால். ஒரு காலத்துல அவங்களை மாதிரியே படிச்சு பட்டம் வாங்கி வாத்தியாராகும். அவ்வளவு ஏன். நம் ரயில்வே இலாகாவுலேயே அதிகாரியாய் வரலாம். தினம் ஒரு உடுப்பு, நாளொரு சாப்பாடுன்னு நாகரிகமாய் வளரும். ஒன்கிட்டே இருந்தால் எப்படி வளரும். நல்லா நெனைத்துப் பாருடா. ஒன்னை மாதிரியே இதுவும் அனாதையாய் ரயில் ரயிலாய், ஆள் ஆளாய்